இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் உள்ளது. 1974-ஆம் ஆண்டும் பின் 1976-லும் இந்திய, இலங்கைக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவால்...
Tuesday, September 24, 2013
சென்னை உலக செஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம்!
இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் நார்வேவின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயத் ரீஜென்சி நட்சத்திர ஓட்டலில் நவம்பர் 9–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இரு வீரர்களும் மொத்தம் 12 சுற்றுகளில் மோதுவார்கள். முன்னதாக நவம்பர் 7–ந்தேதி பிரமாண்டமான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு ரூ.8 கோடியும், தோற்கும் வீரருக்கு ரூ.6 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். போட்டியை சுமார் 400 பேர் நேரில் ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான டிக்கெட் கட்டண...
அடுத்த மாதம் அறிமுகமாகின்றது Ubuntu Touch Mobile இயங்குதளம்!
வைரஸ் தாக்கங்கள் அற்றதும், திறந்த வளமாகவும் கருதப்படும் இயங்குதளமான Ubuntu மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் போன்ற மொபைல் சாதனங்களில் பல்வேறு இயங்குதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனைப் பின்பற்றி மொபைல் சாதனங்களுக்கான Ubuntu இயங்குதள உருவாக்கமும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.அதாவது இந்த இயங்குதளமானது முற்றிலும் தொடுதிரை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றது.இதனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளன...
சர்க்கரை நோய் – கொஞ்சம் கசப்பான உண்மைகள்!
மனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட...
நூற்றாண்டை கடந்த ஏற்காடு சாலையின் வரலாறு!
‘மலை முகடுகளை தொட்டுச் செல்லும் மேகங்கள், அந்த மேகங்களை தொட்டணைத்து நிற்கும் வானுயர்ந்த மரங்கள், வழியெங்கும் வகிடுகளாய் வளைவுகள், இதயம் வருடும் இனிய காற்று’ இத்தனையும் கடந்து சென்றால் பரந்து விரிந்த ஏரி, பசுமை போர்த்திய ரோஜாத்தோட்டம், பக்கவாட்டில் அருவிகள்’ என்று காண்போரின் கண்களுக்கு விருந்தளித்து மனதை நிறைவடையச் செய்யும் இயற்கையின் அதிசயம் தான் ‘ஏழைகளின் ஊட்டியான’ ஏற்காடு. திருமணி முத்தாறு, வசிஷ்ட நதி போன்ற புனிதங்களின் பிறப்பிடமான ஏற்காடு மலையில் பாதை அமைக்கப்பட்டு நூறாண்டு கடந்து விட்டது. நூற்றாண்டு மகிழ்வைக் கொண்டாடும் இத் தருணத்தில் அதன் தொன்மையான வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்ப்போம். சேலம் மாவட்டம் பாண்டிய,...
முதுமலை யானை முகாம் உருவானது எப்படி?
கோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் முதுமலைக்கு போகாமல் திரும்ப மாட்டார்கள். அங்கு நடக்கும் யானை சவாரி பிரபலமானது. காட்டு யானைகளை கண்டாலே தொடை நடுங்கி ஓடும் நமக்கு, இந்த யானைகளை கண்டால் வருடி பார்க்க தோன்றும். கொஞ்சம் கூட பயம் வராது. இயல்பாக காட்சியளிக்கும். இதற்கு காரணமே முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தான்.முதுமலை யானை முகாம் தோன்றியதில் ஒரு வரலாற்று பின்னணியே உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டி எடுத்து செல்லும் பணிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரங்களை கொண்டு செல்லும் யானைகள் தினமும் ஓய்வெடுப்பதற்கு 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய...
வேடர்கள் தங்கிய வேடந்தாங்கல் பெயர் காரணம்!
ஆங்கிலேயர் காலத்தில் அங்கு வேடர்கள் தங்கி பறவைகளை வேட்டையாடினர். அதன் காரணமாக வேடந்தாங்கல் என்று பெயர் வந்தது. அதன் பிறகு பறவைகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டது. இப்போதும் வேடந்தாங்கல், மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பறவைகளை வேட்டையாடுவது, துன்புறுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவது இல்லை. பறவைகள் பயப்படும் என்பதால் வேடந்தாங்கல் மக்கள் தீபாவளிக்கு பட்டாசு கூட வெடிப்பது இல்லை. பறவைகளின் எச்சம் கலந்த ஏரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றன...
ஆப்பிளின் கதை!

'பரவாயில்லை. கடன் வாங்கியாவது இந்த ‘ஜாப்ஸ்’ (Jobs) ஹாலிவுட் படத்தை பார்த்துவிடுங்கள்.தெரிந்த கதைதான். ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரும், கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவானும், சில வருடங்களுக்கு முன் மறைந்தவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை அடியொற்றித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நண்பர்களுடன் இணைந்து ஓர் இளைஞன் ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறான். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். மீண்டும் அந்த நிறுவனத்தை அடைகிறான். வெற்றிகரமாக நடத்துகிறான். அவ்வளவுதான் விஷயம். அவ்வளவுதானா விஷயம்?இல்லை. அதனால்தான் எப்பாடுபட்டாவது இந்தப் படத்தை பார்த்துவிடச் சொல்லி உலகம் முழுக்க பரிந்துரை செய்கிறார்கள். சமகால வரலாற்றுப் படம்...
மூன்று மீன்கள் (நீதிக்கதை)!

ஒரு கிராமத்தில் ஆழமற்ற குட்டை ஒன்று இருந்தது.அதில் பல மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.அவற்றில் ஒரு மீன் அதிக புத்திசாலி,மற்றொன்று ஆழ்ந்த சிந்திக்கும் திறன் கொண்டது.மூன்றாவது மக்கு .ஒருநாள் சில மீனவர்கள் குட்டை நீரை கால்வாய் அமைத்து பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டு பயந்த ஆழ்ந்த சிந்தனை உள்ள மீன் 'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் விரைந்து கால்வாய் வழியே தப்பி வேறு இடம் சென்றிடுவோம்' என்றது.ஆனால் மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.புத்திசாலி மீன்'சமயம் வரும்போது புத்திசாலித்தனமாக தப்பி விடுவோம்' என்றது.ஆனால்..ஆழ்ந்த சிந்தனைக் கொண்ட மீன் அந்த இடத்தை விட்டு..கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.தண்ணீர்...
சிறுநீரகக் கற்கள் ஏற்பட முக்கிய காரணம்!

இன்றைய கால கட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது எனலாம்.சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்படும். நாளடைவில் சிறுநீர் பாதையில் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம். இதற்குமுக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ளாததே. பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ஸலேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்ஸலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும். வருடக்கணக்கில்...
குளுகுளு குற்றாலம்! - சுற்றுலாத்தலம்!
குளுகுளு குற்றாலம்மேற்குத் தொடர்ச்சி மலையில் அருவிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் குளுகுளு பகுதியே குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் தென்னிந்தியாவின் ‘ஸ்பா’ என்றும் அழைக்கப்படுகிறது. காடு, மலைகளைக் கடந்து வரும் தண்ணீர் பல்வேறு மூலிகைச் செடிகளையும் தழுவி வந்து அருவியாக கொட்டுவதால் இயற்கையிலேயே நோய்தீர்க்கும் குணம் கொண்டது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. முக்கியமான பேரருவியே குற்றால அருவி என்றழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற துறையில் விழும் தண்ணீர் பொங்கியெழுந்து விரிந்து பரந்து கீழே விழுகிறது. பேரருவிக்கு சற்று...
படங்களை அடுக்கும் விக்ரம்!
தரணி, கெளதம் மேனன், ஹரி என தான் அடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் இயக்குநர்களை தேர்வு செய்திருக்கிறார் விக்ரம். ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்திற்காக தீவிரமாக உழைத்து வருகிறார் விக்ரம். ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி, ராம்குமார் (நடிகர் பிரபுவின் அண்ணன்) என பலரும் நடித்துவரும் இப்படத்தினை தயாரிக்கிறது ஆஸ்கர் நிறுவனம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் வளர்கிறது ‘ஐ’. இந்த படத்திற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தனது அடுத்தடுத்த படங்கள் யாவுமே குறுகிய காலத்தில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கமர்ஷியல் பாதையை தேர்வு செய்திருக்கிறார் விக்ரம். ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர்...
‘Attharintiki Daaredi’ முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது! அதிர்ச்சியில் ஆந்திரா !
'Attharintiki Daaredi' படத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் பவன் கல்யாண் 'Attharintiki Daaredi' படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் பிரசாத், இயக்குநர் த்ரிவிக்ரம் மற்றும் நடிகர் பவன் கல்யாண் 'Attharintiki Daaredi' திரைக்கு வரும் முன்னரே முழுப்படமும் இணையத்தில் வெளியானதால், ஆந்திர திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘Attharintiki Daaredi’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்’ படம் ஆந்திராவில்...
உப்பு வியாபாரியும்..கழுதையும் (நீதிக்கதை)!

ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான்.அவனிடம் ஒரு கழுதை இருந்தது.அவன் ஊரில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.பக்கத்து ஊருக்குச் செல்லக் கூட ஆற்றைக் கடக்க வேண்டும்.அவன் தினமும் அடுத்த ஊருக்குச் சென்று உப்பு மூட்டையை கழுதையின் முதுகில் ஏற்றி ஆற்றைக் கடந்து தன் ஊருக்கு வந்து உப்பு வியாபாரம் செய்து வந்தான்.அப்படி செய்கையில், ஒரு நாள் உப்பு மூட்டையுடன் கழுதையை ஆற்றில் இறக்கி நடந்து வந்த போது..ஆற்றின் நீர் மட்டம் உயர..உப்பு மூட்டை நனைந்து அதில் இருந்த உப்பு சற்று கரைய..கழுதைக்கு சுமந்து வந்த சுமை சற்று குறைந்தது.இதனால் மனம் மகிழ்ந்த கழுதை..அடுத்தடுத்த நாட்களில் உப்பை சுமந்து வரும்போது..வேண்டுமென்றே தண்ணீரில் அமிழ்ந்து உப்பைக் கரைத்தது.இதனால்..வியாபாரத்தில்...