உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும்...