.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 30, 2013

அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...

உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகம...ாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம்...

வாழ்க்கைப் பாடம்....

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக...

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

 இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய...

மற்றவர்கள் முன்பு நீங்கள் திறமையானவர்களாக திகழ வழிகள்!

 காலத்தின் மாற்றத்திற்கேற்ப – நமது கருத்திலும் வளர்ச்சி வேண்டும்!புதுப்புது திறன்களை கற்றால் – நெஞ்சில் புத்துணர்ச்சி என்றும் தவழும்தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும், பாராட்டு மழையில் நனைவதற்கும் நீங்கள் எப்பொழுதும் திறமையானவராகத் திகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பாக பணி செய்திருக்கக் கூடும்.ஆனால் அது மட்டுமே போதாதது.வாழ்க்கை என்பது ஒரு வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் தேவைக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த அளவிற்குத் திறமையானவர் என்பதை நிகழகாலத்தில் நீங்கள் செய்யும் பணித்திறனை வைத்துத்தான் முடிவு செய்கின்றார்கள். ஆகவே நிகழ்காலப் பணியின் தேவையையும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தையும் கணக்கிட்டு, அவற்றிற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய செயல் திறனை...

தொடரும் நட்பு......

பள்ளி, கல்லூரி கால நட்புகள், படிப்பிற்கு பின் சில வருடங்களில் மங்கி , மறைந்து/ மறந்து போய்விடுகிறது. தற்போது ஆர்குட், ஆன் லைன் சாட், இ-மெயில் லில் அவ்வப்போது 'ஹாய்' ஆவது சொல்லிக்கொள்ள முடிகிறது.இத்தகைய தொடர்பு கூட இல்லாமல், சில வருடங்கள் தொடர்பு அற்று போன நட்பினை ஏதேச்சையாக சந்திக்க நேரிடும் போது, ஆண்கள் தன் சக ஆண் நண்பனிடம் முன்பு நட்பு நெருக்கதிலிருந்த காலத்தில் பழகியது போல் ஒரளவுக்காவது பேசி பழகிக்கொள்ள முடியும். ஆனால், பெண் நட்பினை அவ்வாறு சந்திக்கும் தருணங்களில் பெரும்பாலும் அப்பெண்கள் திருமணமாகி, கணவன் - குழந்தை என குடும்ப பெண்ணாகியிருப்பர், அப்போதும் அவரிடம் அதே நட்போடு பேச முடியுமா? சந்திப்பில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்னென்ன பேசலாம், எவற்றை பேசாமல் தவிர்ப்பது நல்லது என்பதை பற்றி என் கருத்துக்கள்...*.எவ்வளவுதான் கலகலப்பாக பேசிப்பழகும் பெண்ணாக இருந்தாலும், திருமணத்திற்கு பின்...

வெள்ளை மீசை பறவை!

படத்திலுள்ள, இந்த இன்கா டெர்ன்ஸ் எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது.ஸ்டர்னிடி குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள், நீர் பறவை வகையை சேர்ந்தது. பார்க்க நம்ம ஊர் காக்கையை போல இருந்தாலும், கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப் படுகிறது. இதன் அலகுகள், ஆரஞ்சு கலந்த சிவப்பில் இருக்கும். தலைப்பகுதிக்கு, கீழ் இருபுறமும் வெள்ளை மீசை இருக்கும் ஒரே பறவை இனம் இதுதான். இதன் கால்களும், பாதமும் மருதாணி வைத்ததை போன்று, கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.பாறைகளுக்கு நடுவிலும், மரப்பொந்துகளிலும் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும். ஒரு முறைக்கு, ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே இடும்....

கோபம் கோபம் கோபம்!

மூன்று எழுத்திலே மனிதனின் வாழ்கை உள்ளது ! ஆம் நம்மை நிர்ணிப்பது பல, அவற்றில் சில முன்றே எழுத்து உதாரணமாக மனம் மானம் கல்வி காதல் .இதில் மிக முக்கியமானது மனம் அதன் வழி வருவது கோபம். ஆம். நான் எனக்கு கோவத்தை பற்றி தெரிந்ததை உங்களிடம் பகிர விரும்புகிறேன் .சரி நாம் முதலில் ஒரு உதாரணம் காண்போம் ஒரு மாணவி அன்று ஸ்கூலில் காலையில் extra class இருக்குது என்று சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அதற்கு முன்தினம் கூறுகிறாள் . அவர்களும் சரி என்கிறார்கள் .அடுத்த நாள் காலை அவள் லேட்டாக எழுகிறாள் வீட்டிலுள்ள அனைவரையும்  திட்டுகிறாள். அம்மாவிடம் "எவ்ளோ நேரமா தான் சமைக்கிற" என்று கத்துகிறாள் தங்கையிடம் சீக்ரம் டிரஸ் iron பண்ணுடி" என்கிறாள் . தந்தை இடம் எதுவும் சொல்ல சொனால் அவளுக்கு திட்டு தான் என்பது தெரியும் . இவ்ளோ கத்திவிட்டு பள்ளிக்கு செல்கிறாள் அங்கே சென்றால் ஆசிரியர் வரவில்லை . நிதானமாக யோசித்தால் இதில்...

சருமத்தை பளபளக்க வைக்கும் சில அற்புத எண்ணெய்கள்!!!

அழகான மற்றும் பளபளப்பான தோலை பெற வேண்டும் என்றால் தோலை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். உங்கள் தோலை பளபளப்பாக வைக்க செய்ய வேண்டியவற்றில் ஒன்றாக அதற்கு மிகவும் தேவையான எண்ணெய் சத்துக்களை அளிக்க வேண்டும். மிகவும் தேவையான எண்ணெய்கள் என்று வரும் போது, அவை சென்ட் பாட்டில்களில் விற்கப்படும் தாவரச் சாறுகளை குறிப்பிடுவதில்லை. இந்த எண்ணெய்களுக்கு உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சிறந்த குணங்கள் உள்ளன. இவை வலி நிவாரணிகளாகவும் மற்றும் சக்தியை வழங்குபவையாகவும் கூட செயல்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் உங்கள் தோலையும் பளபளக்கச் செய்கின்றன.மூப்படைதல், ஹார்மோன் சமனிலையற்ற தன்மைகள் மற்றும் பிற காரணங்களால் நமது தோல் பகுதி பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறது....

கறிவேப்பிலை ஜூஸ் - சமையல்!

கறிவேப்பிலை ஜூஸ் என்னென்ன தேவை? தளிர் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,பச்சை மிளகாய் - 1/2,உப்பு - தேவைக்கேற்ப,சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.எப்படிச் செய்வது? கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை இவற்றுடன் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.அதனுடன் பாதி அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகவும். சுவையான புத்துணர்ச்சி பானம்...

7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்!

வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர் உடல் நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அதற்காக ஒரு குழுவை தேர்வு செய்து அவர்களை கோயில் ஒன்றில் தங்க வைத்தனர். அவர்களுக்கு சைவ உணவை வழங்கப்பட்டது.. இந்த ஆய்வுக்கு முன்பும் அவர்களின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. கோயிலில் தங்கி சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது...

உங்கள் துணை எப்படிப்பட்டவர் - அவசியம் படிக்கவும்!

காதல்! உலகத்தில் இருபது முதல் அறுபதுவரை அத்தனைபேரையும் கட்டிப்போடும் மந்திர சக்தி. காதலில் ஜெயிப்பது தோற்பதை விட அதை கடந்து வராதவர்கள் ஒருசிலர். அப்படி கடக்காதவர்கள் பிறவிப்பயன் அற்றவர்களே. ஒவ்வொருவருக்கும் காதல் வந்தபின் அவரவர் துணையைபற்றி அறிய ஆவலாக இருக்கும். அவர் தன் மேல் அன்பு எவ்வளவு வைத்திருக்கின்றார், தனக்காக என்ன எல்லாம் செய்வார் இப்படி பல. அப்படியானவர்களுக்கு இந்த பதிவு(திருமணமானவர்களும் தங்கள் துணை பற்றி அறியலாம்.)இதை நானாக சொல்லவில்லை நான் இன்னொரு இடத்தில் படித்ததை உங்களிடம் பகிருகின்றேன். (யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.)முதலில் உங்கள் பிறந்த ஆண்டு, மாதம், திகதி ஆகியவற்றை கூட்டி எடுங்கள். அதுதான் உங்கள் காதல் எண்.(இதேபோல உங்கள் துணையின் எண்ணையும் கூட்டி எடுங்கள்) உதாரணம்: பிறந்த திகதி 8 பிறந்த மாதம் 8 ஆண்டு 1988 என்றால் 8+8+1+9+8+8=42 பின் 4+2 அதையும் கூட்டுங்கள்....

சிவகார்த்திகேயன் வாங்கிய முதல் சம்பளம்!

 ''இதுக்கு முன்னாடி டி.வி-யில் லைவ் நிகழ்ச்சிகளில் வந்துட்டு இருந்தீங்க. இப்போ நீங்க நடிக்கிற சினிமா ஆறு மாசம் கழிச்சு டி.வி-யில் ஒளிபரப்பாகுது. இதுக்கு பேசாம நீங்க டி.வி-யிலயே இருந்திருக்கலாமே?''- இப்படி சில எகிடுதகடு கேள்விகளுடன் சிவகார்த்திகேயனைச் சந்தித்தேன். ஆனால், பார்ட்டி செம பக்கா!''நீங்க சொல்றதும் உண்மைதான். 'வாழ்க்கை ஒரு வட்டம்’கிற கான்செப்ட்தான். சினிமாவில் கிடைக்குற பணம், புகழ் வேற ரேஞ்ச். அதுக்காகவாச்சும் சினிமாவிலேயே இருந்துட்டுப் போறேனே!''''சிம்பு நடிச்சதில் பிடிச்ச படம்?''''விண்ணைத் தாண்டி வருவாயா.''''உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு?''''இவ்வளவு நாளா இல்ல. இப்பதாங்க கொஞ்சம் இருக்கு. அதுவே பெரிய விஷயம்!''''நீங்கள் ரசிக்கும் எதிரி...

யார் கடவுள் ?

கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான்.கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள்.பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ?தெரியாது!எந்த குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொல்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில் தன் பெற்றோரிடமிருந்து கற்றுகொள்வது தான் அதிகம்.குழந்தைகளுக்கு ஒரு குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால் நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள் கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.இது அனைவருக்கும் தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள், என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி கொள்ளமுடிவதில்லை.கடவுள்...

ஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை...?

இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எவ்வாறு ஹாக் செய்ய படுகிறோம், நம்மை எவ்வாறு தற்காத்து கொல்வது, எந்த விட தடயமும் இல்லாமல் எப்படி மற்றவர்கள் சிஸ்டம்ஸ் ஹாக் செய்யவது என்பது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம்....Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard -4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் அக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் அணுகினால் உங்களுக்கு உற்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த கான்செப்ட் நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். “ Dont Learn To Hack, But Hack To Learn: நான் நிறைய பேரை இணையத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் Over nite il Obama...

அன்புள்ள 'தல', 'தளபதி'களுக்கு...

 ரஜினிக்கும் கமலுக்கும் ஒருசேர ரசிகராக இருக்கும் பலரைப் போல, உங்கள் இருவரின் படங்களையும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க விழையும் ஃபேன் நான். தமிழ் திரையுலகில் வாரம்தோறும் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படம் வெற்றி, அந்தப் படம் தோல்வி என்று கணிப்பது யார் கையிலும் இல்லை. உங்களது ரசிகர்களிடமும்கூட உங்களது படத்தின் வெற்றி, தோல்வி கிடையாது. உங்களது படம் வெளியாகும்போது, முதல் நாள் படத்தைப் பார்த்துவிட்டு, "தலைவா பின்னிட்டீங்க" என்று கூறிவிட்டால், நீங்கள் நடிக்கும் படம் ஒன்றும் வெற்றி படம் கிடையாது. அது உங்களுக்கும் நன்றாகத் தெரியும். படத்தில் நடிக்க சம்பளம் வாங்கிவிட்டு, நடிக்கும் படம் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது அடுத்தப் படத்தினை தேர்வுசெய்து,...

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் எங்கே இருக்கிறார்?நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”“நிச்சயமாக ஐயா..”“கடவுள் நல்லவரா?”“ஆம் ஐயா.”“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”“ஆம்.”“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”“ஆம்...

சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா? படித்து மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்கள்!

கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப்படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...ஆமாம்! வருடக்கணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷனில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்றுநோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகித்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சியான விளம்பரங்களைச்...

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில்...

உங்க இதயத்தை ஆரோக்கியமாக வச்சுக்க இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...

ஆரோக்கியமான வாழ்வை நீடித்து வாழ்வதற்கு நமக்கு ஆரோக்கியமான இதயம் மிக அவசியமாக தேவை. வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இல்லாவிடில் ஆரோக்கியமான இதயத்தை பெற இயலாது. நமது இதயம் 66 ஆண்டுகளில் ஏறத்தாழ 2.5 பில்லியன் முறை துடிக்கின்றது. இத்தகைய மிக அவசியமான உறுப்பான இதயத்தை மதிப்புடனும் அக்கறையுடனும் பராமரிக்க வேண்டும். பல பேர் இதயம் செய்யும் அனைத்து காரியங்களையும் தான்தோன்றித்தனமாக எடுத்துக் கொண்டு மோசமான வாழ்க்கை முறைகளால், இதயத்தின் ஆரோக்கியத்தை கைவிட்டு விடுகிறார்கள்.நம் வாழ்கை முறையில் உள்ள பல காரணிகள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எப்படி இருந்தாலும் சில மரபணு கோளாறுகள் நம்முடைய கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் இதயத்தை பாதித்து வருகின்றன. ஆரோகியமற்ற...

‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’ கனவாக விரியும் சாகசக் கதை!

 கற்பனைக்கெட்டாத தொலைவில் ஒரு உயர்ந்த இலக்கு. பிரத்யேக சிறப்பியல்புகளைக் கொண்டவர்களின் துணையுடன் அதை அடைய ஒரு நெடிய பயணம். வழியில் எதிர்ப்படும் இன்னல்கள், எதிர்கொள்ளும் சாகசங்கள். ஒரு வெற்றிப் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த வகைக் கதைகள் படிப்பதற்குச் சுவையாக இருக்கும். ஆனால் அவற்றைப் பொது ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் திரைப்படமாக எடுப்பதற்கு ஒரு ஜாம்பவானால்தான் முடியும். பிரம்மாண்டமான மாயக்கனவுலகின் திரைவடிவமாக உருவான ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ வரிசைப் படங்களை இயக்கிய பீட்டர் ஜாக்ஸன் இயக்கத்தில் உருவாகி, வரும் டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவிருக்கும் படம் ‘தி ஹாபிட்: தி டிசொலேஷன் ஆப் ஸ்மாக்’. ‘ப்ரெய்ன் டெட்’ என்ற கொடூரமான...

வேடிக்கையான வேலை வேண்டாம் கடிதங்கள்.....

Resign என்று கூகிள் இல் தேடிய போது கிடைத்த சில வேடிக்கையான, விதியாசமான வேலை வேண்டாம் கடிதங்கள், சில உங்களின் பார்வைக்கு.....ஒரு பிளாக்கர்-இன் resignation letter ஒரு விமானியின் முயற்சி,web design இல் வேலை செய்பவரின் முயற்சிகேக்கில் resignation letterஅமெரிக்க ஜனாதிபதின் resignation letter yahoo resignation letter generator சில வேடிக்கையான resignation letter இதை எல்லாம் விட நமவர்கள் அனுப்பும் சில கடிதங்கள்,Fromநான் தான்உன் துறை தான்உன் கம்பெனி தான்Toநீ தான் உன் துறை தான் ஐயா,நான் இனிமேல பணிக்கு வரமாட்டேன், உன்னால் முடிந்ததை செய்து கொள்இப்படிக்குநான் தான்...

ரத்தம் வெளியேறும் நேரம்!

 ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரத்தில் உறைகிறது என்பதை கணக்கிடுவதே ரத்தம் உறையும் நேரம் ஆகும்.இதற்கு ஒரு சோதனையை செய்கின்றனர். விரல் நுனியை ஆல்கஹால் கொண்டு துடைத்து விட்டு சிறிது அழுத்தி தேய்கின்றனர். இந்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பின்னர் சுத்தமான ஊசியை கொண்டு விரல் நுனியில் குத்துகின்றனர். அப்போது ரத்தம் வர ஆரம்பிக்கும். இந்த நேரத்தை குறித்து கொள்கின்றனர்.பின்னர், "பிளாட்டிங்' பேப்பரை வைத்து ரத்தத்தை ஒத்தி எடுக்கின்றனர்.ரத்தம் வெளிவருவது நிற்கும்...

ஆக்டர் அஜித் vs டாக்டர் அஜித்!

 '' 'நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் ரொம்ப எமோஷனலா இருக்கு சிவா’னு நாசர் சார் சொன்னார். 'அஜித் சாரை வெச்சு ஆக்ஷன் ப்ளாக் இருக்கும்னு நினைச்சா, இவ்வளவு காமெடி இருக்கே’னு ஒளிப்பதிவாளர் வெற்றி ஆச்சர்யப்பட்டார். மேக்கிங்லயே 'வீரம்’ இவ்வளவு பாராட்டுக்களை வாங்கினது சந்தோஷமா இருக்கு!''  - அஜித்தின் அடுத்த படப் பரபரப்பைப் பற்ற வைக்கிறார் 'வீரம்’ இயக்குநர் சிவா.'' 'வீரம்’ படத் தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டியை முதன்முதலா சந்திச்சப்போ, 'எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு இந்தப் படம் இருக்கணும். குழந்தைகள்ல இருந்து தாத்தா பாட்டிகள் வரை எல்லாரையும் தியேட்டருக்குக் கொண்டுவந்து நிறுத்தணும்’னு...

நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது,இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.-ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள்,கடைசியாக கண்கள் விழிப்படைகின்...
 
back to top