.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 26, 2013

தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு!

முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று. இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா...

சொட்டவாளக்குட்டி’ @ நையாண்டி ஸ்பெஷல் ஆல்பம்!

தனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் ‘நையாண்டி’. ‘களவாணி’ சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.’சொட்டவாளக்குட்டி’ என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. பின்பு ‘நையாண்டி’ என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்த தேதிக்கு முன்னதாகவே தனது நையாண்டி படத்தை வெளியிடும் ஐடியாவில் இருக்கிறாராம் தனுஷ். இதனை மறை முகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படம் வெளி வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களே நீங்கள் எதிர்பார்க்கும் தினத்திற்க்கு முன்னதாகவே படம் வெளியாகலாம்...

வேகன் ஐஸ் கிரீம்!

என்னென்ன தேவை?மிகவும் கனியாத வாழைப்பழங்கள்-2வேர்க்கடலை வெண்ணெய்-1 1/2மேஜைக்கரண்டிகோகோ தூள்-3/4 தேக்கரண்டிவெண்ணிலா எசென்ஸ்-3 சொட்டுமுந்திரி பருப்பு, பாதாம் பருப்புஎப்படி செய்வது?ஒரு ஜாடியில் வாழைப்பழம், வெண்ணெய், கோகோதூள், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடிக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலகரித்து பரிமாறவு...

காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?

காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.ஈரோடு அருகே...

நோக்கியா Lumia 1020 அக்டோபர் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம்!

நோக்கியா நிறுவனம் அதன் புதிய நோக்கியா Lumia 1020 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா Lumia 1020 அக்டோபர் 11-ம் தேதி முதல் நாடு முழுவதும் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும். நோக்கியா Lumia 1020 ஒரு 4.5-அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பிளாக் வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற மூன்று வண்ணங்களில் புதிய Lumia 1020  கிடைக்கும்.  மேலும், இரண்டு அக்சசரி பாகங்கள் கொண்ட Lumia 1020  இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா கேமரா கிரிப் ரூ.7,500  மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஷெல் ரூ.3,200 விலையில் கிடைக்கும். நோக்கியா Lumia 1020 அம்சங்கள்: 768x1280 தீர்மானம் கொண்ட 4.5 அங்குல AMOLED ClearBlack டிஸ்ப்ளே1.5GHz dual-core...

பிளாக்பெர்ரி Z10 இந்தியாவில் திருவிழா கால சலுகையாக விலை குறைவு!

பிளாக்பெர்ரி நிறுவனம் வரையறுக்கப்பட்ட திருவிழா கால சலுகையாக இந்தியாவில் பிளாக்பெர்ரி Z10 ரூ.29.990 ஆக விலை குறைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் சலுகை காலத்தை வெளிப்படுத்தப்படவில்லை. பிளாக்பெர்ரி நிறுவனம் சமீபத்தில் லேட்டஸ்ட் phablet மற்றும் பிளாக்பெர்ரி Z30 வெளியிடப்பட்டது. பிளாக்பெர்ரி Z10 அம்சங்கள்: 4.2 அங்குல காட்சி768 x 1280 பிக்சல்கள், 1.5GHz டூயல் கோர் ப்ராசஸர் ரேம் 2GB 16 GB inbuilt சேமிப்பு எடை 137.5 கிராம்8 மெகாபிக்சல் பின்புற கேமரா 2 மெகாபிக்சல் முன் கேமரா GSM64 GB வரை விரிவாக்கக்கூடிய microSDWi-Fi, 802.11குவால்காம் MSM8960 ஸ்னாப்ட்ராகன்Li-Ion 1800 Mah பேட்டரி கொண்டுள்ளது.&nb...

தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் அதிரடியாக தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகப்படுத்தியுள்ளது. தங்க பிரவுன் அல்லது தங்க பிங்க் - தங்க கேலக்ஸி S4s இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். பிங்க் மற்றும் ப்ரவுன் போன்களில் தங்க நிறத்தில் பின் தகடு கொண்டுள்ளது. சாம்சங் விலை அல்லது கிடைக்கக்கூடிய தகவல்களை வெளியிடவில்லை. அவை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் மட்டும் கிடைக்கும். இது மத்திய கிழக்கு சந்தைகளில் விற்பனை செய்ய இலக்காக உள்ளது போல் தெரிகின்றது....

ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர் - சுற்றுலாத்தலங்கள்!

ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர்ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் 'ஜந்தர்மந்தர்' என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.  இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.வானவியல் கருவிகள் இங்குள்ளன.ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் 'யந்த்ரா மந்த்ரா'. இதில் 'யந்த்ரா' என்றால் கருவிகள். 'மந்ந்ரா' என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும். இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது. இங்கு...

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி: பிளஸ் 1 மாணவியர் கண்டுபிடிப்பு!

மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.சென்னை, பெரம்பூர், கல்கி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகிய மூன்று மாணவியர், மிக மிக குறைந்த செலவில் கொசுவை ஒழிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.இந்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு, அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். அப்போது மாணவியர் கூறியதாவது:மனித உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், கார்பன் டை ஆக்சைடு, வியர்வையில் இருந்து வெளிப்படும் வாசனை மூலம் கொசுக்கள் மனிதர்களை அடையாளம் கண்டுபிடித்து,...

பேஸ்புக் ஷார்ட் கட் கீகள்!

இன்றைய உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது பேஸ்புக் மற்றும் யூடியூப் தான்.இவற்றிற்கான ஷார்ட் கட் கீகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகள்Alt+1 - Facebook Home Page Alt+2 - Your Profile Page Alt+3 – Friend’s Request Alt+4 – Inbox (Message) Alt+5 – Notifications Alt+6 - My Account Alt+7 – Privacy Settings Alt+8 – Facebook Fans Page Alt+9 - Terms and Conditions Alt+0 – Help யூடியூப் ஷார்ட்கட் கீகள்Spacebar – Start/Stop The VideoLeft Arrow – Rewind The Video Right Arrow – Previous Video Up Arrow - Increase Sound Down Arrow – Descres Sound F key – Full Screen&nb...

மருதனும்...பாறாங்கல்லும் (நீதிக்கதை)

  ஒரு ஊரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்தனர்.யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் ... தங்கள் நலத்தையே எண்ணி,,அதனால் பிறர் துன்பம் அடைந்தாலும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களை திருத்த என்ன செய்யலாம் என மன்னன் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அந்த ஊருக்குள் வரும் முக்கியமான சாலை ஒன்றிற்கு குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லை போட்டு வைத்தான். மறுநாள் மக்கள் ...அவ்வழியில் நடக்கையில் ..அந்த கல்லின் மீது ஏறியே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.ஒருவருக்காவது வழியில் தடையாயிருக்கும்  அந்தக் கல்லை நீக்கி பின்னால் வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த...

ரீவ்ஸ் எனும் நிஜ சூப்பர் மேன்!

'சூப்பர் மேன்' படத்தில் கிறிஸ்டோபர் ரீவ்ஸ்     கிறிஸ்டோபர் ரீவ்ஸ்  ஒரு சூப்பர் ஹீரோ கதை என்றால் என்னென்ன இருக்கும்? ஹீரோ முதலில் கலக்கி எடுப்பார். பின்னர் தோல்விகள், அதிலிருந்து மீண்டு வருவார்... இதானே? நடுவில் கொஞ்சம் காதல், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கலந்துவிட்டால் ஒரு சூப்பர் ஹிட் படம் தயார். உண்மையான சூப்பர் ஹீரோவில் ஒருவர் கிறிஸ்டோபர் ரீவ்ஸ். சின்ன வயதிலேயே சாகசம் என்றால் மனிதருக்கு ரொம்பவே விருப்பம். அட்டைக்கத்திகள் செய்துகொண்டு சகோதரருடன் சண்டை, பனிச்சறுக்கு, ஒரு குட்டி விமானத்தில் ஏறி ஹாயாக அட்லாண்டிக் கடலின் மீது ஒரு த்ரில் பயணம்... வாழ்க்கையில் புதிதாக எதையாவது செய்ய வேண்டும்... அது தான் மனிதரின்...

Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 அக்டோபர் மாதம் அறிமுகம்!

Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்புடன்(limited edition) அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 3 Flexible டிஸ்ப்ளே அம்சங்கள்5.7-இன்ச் முழு HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வருகிறது,  168 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது.  1.9GHz Octa-core செயலி புரோஸசர் 3GB  800 குவால்காம் ஸ்னாப்ட்ராகன்  13-மெகாபிக்சல் பின்புற கேமரா 2-மெகாபிக்சல் ஸ்நாப்பர் முன் கேமரா 3,200 Mah பேட்டரி மூலம் இயங்கும்.  ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்கும். 4K தீர்மானம் வீடியோக்களை பதிவு செய்ய திறன் உள்ள LED ஃபிளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. வீடியோ...

திசு சிகிச்சையில் நெற்றியில் மூக்கு!

 சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் சரியான சிகிச்சை எடுக்காததால், தொற்று காரணமாக குருத்தெலும்பு முற்றிலும் சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. அதை டாக்டர்களால் சரிசெய்ய முடியவில்லை. இவருக்கு தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கு உருவாக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளது. இது விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு, பொருத்தப்படவுள்ள...

இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?

 விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.   அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன. விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது....

குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )

ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது.ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது.குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது.முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள் இவ்வளவு...
 
back to top