.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, January 4, 2014

அஜித் வழியில் விஜயசேதுபதி..!

தமிழ்சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் விஜயசேதுபதி வளர்ந்துவிட்ட நடிகர்.  நான்கு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்றோ, ரசிகர்களின் பேராதரவு கிடைக்குமென்றோ விஜயசேதுபதி எதிர்பார்க்கவில்லை.ரசிகர்களின் ஆதரவு பற்றி சூதுகவ்வும் திரைப்படம் ரிலீஸான போது விஜயசேதுபதி “ நான் யாருக்கும் தெரியாம லாஸ்ட் சீட்ல உட்கார்ந்து படம் பாத்துகிட்டிருந்தேன். ஸ்கிரீன்ல நான் வந்த அந்த மொக்க எண்ட்ரிக்கு எல்லாரும் கை தட்டுனத பாத்து அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்று கூறியிருந்தார்.இவ்வளவு பெரிய ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா! விஜய சேதுபதியின் ரசிகர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து ஆங்காங்கு விஜயசேதுபதிக்கு ரசிகர்மன்றங்களை...

டைரக்டர்களை நேர்முகத்தேர்வு செய்யும் சிவகார்த்திகேயன்..!

தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் விஜயசேதுபதி தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள் படங்களில் பணியாற்றிய அனுபவமே இல்லாதவராக இருந்து, குறும் படம் இயக்கியவர் என்றால் நம்பி கால்சீட் கொடுத்து விடுவார். அப்படி அவர் நம்பி நடித்த எந்த படமும் அவரை ஏமாற்றவும இல்லை. அதனால்தான் இப்போது குறும்பட டைரக்டர்களுக்கு கோடம்பாக்கத்தில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.ஆனால், சிவகார்த்திகேயன் அப்படியெல்லாம் எந்த படத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று ஒத்துக்கொள்வதில்லை. ஒருவர் தன்னிடம் கதை சொல்ல முயற்சி எடுக்கிறார் என்றதுமே அவரைப்பற்றிய மொத்த தகவல்களையும் முன்கூட்டியே நேர்முகத்தேர்வு நடத்துகிறார்....

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விஜயசேதுபதி..?

2013 இல் சூதுகவ்வும், இதற்குத்தானேஆசைப்பட்டாய்பாலகுமாரா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் விஜயசேதுபதியின் சந்தைமதிப்பும் சம்பளமும் பெருமளவில் உயர்ந்துவிட்டது. சூதுகவ்வும் படத்துக்கு அவர் அவர் வாங்கிய சம்பளம் ஐம்பதுஇலட்சத்துக்கும் குறைவு என்கிறார்கள். இப்போது சூதுகவ்வும் படஇயக்குநர் நலன்குமாரசாமியையும் விஜயசேதுபதியையும் சேர்த்து ஒரு படத்தை எடுக்கவிரும்பினாராம் சூதுகவ்வும் படத்தின் தயாரிப்பாளர் குமார். இயக்குநர் எழுதியிருந்த ஒரு கதை, விஜயசேதுபதிக்கும் பிடித்துப்போய்விட்டது. சரி, வரிசையாக இருக்கும் படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்தைத் தொடங்கிவிடலாம் என்று முடிவும் செய்துவிட்டார்கள். இந்நிலையில் சம்பளம் பற்றிப் பேச்சு வந்திருக்கிறது....

சூரியின் பெயரில் போலி முகவரி..?

நகைச்சுவை நடிகர் சூரியின் பெயரில் ட்விட்டரில் தொடங்கப்பட்டிருப்பது போலி ஐடி என்று செய்திகள் பரவிவருகின்றன.பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை நேராகத் தனது ரசிகர்களிடமும், பொதுமக்களிடமும் சேர்ப்பதற்கு சமீபகாலங்களில் சமூக வலைத்தளங்கள்பெருமளவில் உதவிபுரிகின்றன. பெரும்பாலான பிரபலங்கள் இச்சமூக வலைத்தளங்களில் இணைந்து தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பிரபலங்களுக்குத் தங்களின் கருத்துக்களைப் பகிர உதவுகின்றனவோ அதைப் போலவே அவர்களின் பெயரில் போலி உருவாக்கப்படும் போலி அக்கவுண்ட்களால் பிரச்னைகளாகவும் உருவெடுத்துவருகின்றன.ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக ஊடகங்களில் பிரபலங்களின் பெயரில் அனேக போலி ஐடிக்கள் தொடங்கப்படுகின்றன. இதன்மூலம்...

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உறவுகள் வேண்டுமே!1.வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்களது உறவுப் பாலத்தை எப்படி காப்பாற்றி வைக்கலாம் ?நாம் நமது பிறப்பிடத்தை விட்டு வெளிநாடு சென்று வாழ்ந்தாலும் நமது வாழ்க்கை என்னவோ நமது சொந்த ஊரில் உறவுகளை தொடர்ச்சியாக வைத்திருப்பதில் தான் சந்தோசம் இருக்கின்றது.                                                                        ...

மரணத்தின் மறுபக்கம்...!

எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம்.  பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே.  என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே.  மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும்.  எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.  எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.  எமது வாழ்வில் நாம் செய்யாத...

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த...

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…

சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட...

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?கைரேகை பலன்கள்:பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40...

உறவுகளின் இணைப்பை விரிவுபடுத்துவோம்.!

இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம்.தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றேபதில் வரும். இவை தவிர, தொழில்முறை உறவுகளும் உள்ளன. ஆனால், இந்த உறவுகளும் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையிலும்...

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி....

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழிகலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம்வாயுத் தொல்லைக்கு பெருங்காயம்பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி...

ஆஷஸ்: ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து தள்ளாடுகிறது

ஆஷஸ்: ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து தள்ளாடுகிறது:-வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சொந்த ஊரில் சதம் அடித்தார்,மேலும் பிராட் ஹாடின் பேட்டிங்கில் இங்கிலாந்து தள்ளாடுகிறது.கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் போர்த்விக், ரேங்கின், பிளான்ஸ் ஆகிய 3 பேர் அறிமுகமானார்கள். டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் கூக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர் 16 ரன்னிலும், ரோஜர்ஸ் 11 ரன்னிலும் போல்டு ஆகி வெளியேறினர். கேப்டன் கிளார்க் 10 ரன்னில் அவுட் ஆனார். வாட்சன் 43 ரன்களில் வெளியேறினார்....

ஜில்லா - வீரம் ஆன்லைன் புக்கிங் துவங்கியது

இளைய தளபதி விஜயின் ஜில்லா மற்றும் தல அஜித்தின் ஆரம்பம் திரைப்படங்கள் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவிருக்கின்றன. இதனையொட்டி இப்படங்களின் ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது.இளைய தளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில், நேசன் இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரிதயாரிப்பில் உருவாகியிருக்கிறது ஜில்லா திரைப்படம்.தல அஜித், தமன்னா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது வீரம் திரைப்படம்.ஜில்லா, வீரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் U சான்றிதழ் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்ஆகியோர் நடிப்பில் வெளிவருகின்ற படங்களென்பதால் இப்படங்களைப்...

ஸ்டார்களைத் துரத்தும் ஹீரோக்கள்..!

புத்தகமே வாசிக்க தெரியாத காலத்திலிருந்து, முகப்புத்தகத்தில் கைகலப்பு நடத்தி சட்டையை கிழித்துக் கொள்ளும் இந்த காலம் வரைக்கும் ரசிகர்களின் உலகம் சினிமாதான்! தமிழகத்தை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் பின்னி பிணைந்திருந்தாலும், சினிமாவிற்குள் காலகாலமாக ஒரு அரசியல் யுத்தம் நடக்கிறது. அது ஆணானப்பட்ட பாகவதர் காலத்திலிருந்தே துவங்கி, ‘அழகுராஜா’ கார்த்தி காலம் வரைக்கும் தொடர்வதுதான் ஒரு ஆக்‌ஷன் படத்தைவிடவும் விறுவிறுப்பான சமாச்சாரம். நாடகத்தில் கிட்டப்பாவின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு தியாகராஜ பாகவதர் வருகிறார். சினிமாவில் பாகவதரின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு சின்னப்பா வருகிறார். இவர்களை காலி பண்ண ஒரு சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வருகிறார்கள் என்று எப்போதும்...

சரவணன் சம்பளம் நான்கு கோடி..?

எங்கேயும் எப்போதும், இவன்வேறமாதிரி ஆகிய படங்களை இயக்கிய சரவணனை நோக்கி நிறையப் படநிறுவனங்கள் வருகின்றனவாம்.அவர்களில் முந்திக்கொண்டு வந்திருப்பது ஏஆர்.முருகதாஸ் என்கிறார்கள். அவரடம் உதவிஇயக்குநராக வேலை பார்த்தவர் என்பதால் எல்லோரையும் விட எனக்கே முன்னுரிமை கொடுத்து எங்கள் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம் முருகதாஸ்.அவர் நிறுவனத்துக்குப் படமெடுத்தால் அதிகச் சம்பளம் கேட்கமுடியாதே என்று யோசித்த சரவணன், பதில் சொல்லாமல் நாட்களைக் கடத்தியிருக்கிறார்.இதுதான் காரணம் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட முருகதாஸ், அடுத்த படத்தை எங்களுக்கு எடுத்தால் உனக்குச் சம்பளம் நான்குகோடி என்று சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதைச்...

இரட்டைவேடங்களில் சூர்யா..!

              லிங்குசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிற படத்தை அடுத்து வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா. பொதுவாக மையக்கதையை மட்டும் சொல்லிப் படத்தைத் தொடங்கிவிடுவார் வெங்கட்பிரபு. ஆனால் இப்போது சூர்யா படத்துக்கான முழுமையான திரைக்கதையை எழுதிவிட்டுத்தான் படப்பிடிப்பு தொடங்கப்போகிறார் என்று சொல்கிறார்கள்.              அதெல்லாம் அப்படித்தான் சொல்வார், ஆனால் படப்பிடிப்புத்தளத்தில்தான் அவருக்குப் புதுப்புது யோசனைகள் வரும் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ? வெங்கட்பிரபு படத்தில்...

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!

ATMகளில் பணம் எடுக்க கட்டணம்: ரிசர்வ் வங்கி அனுமதி..!ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.அதே சமயம் மற்ற வங்கிகளின்...

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன..?

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம்.பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும்....

ஹாட்ரிக் அடிக்கும் நயன்தாரா..?

தெலுங்கில் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறது வெங்கடேஷ் நயன்தாரா ஜோடி.2014ம் ஆண்டில் தமிழில் 5 படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.இதில் தெலுங்கில் ‘ராதா’ என்ற படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகிறது இந்தப்படம்.ஏற்கனவே இவர்கள் இரண்டுபேரும் ‘லட்சுமி’ ‘துளசி’ என இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்க...

YouTube வழங்கவுள்ள புதிய வசதி..!

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.இவற்றின் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டில் குறைந்த இணைய வேகத்திலும் வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.4K Streaming எனும் இத்தொழில்நுட்பத்தினை இந்த வருடம் இடம்பெறும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.அதேவேளை தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய Ultra HD 4K எனும் தொழில்நுட்பத்தினையும் YouTube நிறுவனம் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன.உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது....

ebay மூலம் மனித மூளையை விற்றவன் அமெரிக்காவில் கைது..!

அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் "ஈ பே" மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர். அங்குள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட மூளைகளை அவன் திருடியுள்ளதாக தெரிகிறது.கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அவன் அந்த அருங்காட்சியகத்தில் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் 2000 நோயாளிகளின் உடல் உறுப்புகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் 1890 முதல் 1940 வரையான காலத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு...

குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...

குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் காதுகளின் மடிப்புகளில் தேங்க வாய்ப்புள்ள செத்த அணுக்களையும் நீக்கும். குழந்தைகளின் காதுகளில் உண்டாகும் வேக்ஸ் எந்த ஒரு தொற்றையும் ஏற்படுத்தாது. மேலும் அது காது கேட்கும் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. அதனால் பொதுவாக காதுகளில் உருவாகும் வேக்ஸ் ஆபத்தில்லாத ஒரு சாதாரண பொருளாகவே திகழ்கிறது. இது கிருமிகள் மற்றும் அயல் பொருட்களை காதுக்குள்...

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!

ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம். எனவே, கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்று, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்றியமையாத ஒரு மென்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயங்கும் அதிகத் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராமாக ஆண்ட்டி வைரஸ்...

‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ல் வெளியீடு

கோச்சடையான்’ படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்த நிலையில் தள்ளிப் போய் தற்போது இப்படத்தின் இசை இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.கொச்சடையான் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, சீனாவில் தங்கி கவனித்து வந்தார். ஆனாலும் திட்டமிட்ட நாட்களுக்குள் இந்த படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 வெளியாகவிருந்த ஆடியோ வெளியீட்டு விழா தள்ளி போனது.அத்துட்ன் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதும் ந்டைபெறவில்லை.இதற்கிடையில், ‘கோச்சடையான்’ படத்தின்...

சீயானின் ‘த்ரிஷ்யம்’ மோகம்..!

‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் விக்ரம்.கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர்.படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும், மோகன்லாலின் நடிப்பிலும் மனதைப் பறிகொடுத்துள்ள விக்ரம் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.தற்போது இதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையை மோகன்லாலின்...

மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்னென்ன?‘மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக்கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?நமக்கு ஏற்படும் சில...

‘தல’யின் அடுத்த படம் யாருக்கு..?

கௌதம் மேனன் இயக்கத்திற்கு பிறகு ‘தல’ அஜித் யாருடைய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற பேச்சு அலை கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளன.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வீரம் படம் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க தயாராக உள்ளது.இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15 முதல் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.ஆனால் இந்தப்படத்திற்கு பிறகு தலயின் அடுத்த படம் யாருக்கு என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், காற்று வழியாக இரண்டு தகவல்கள் கசிந்துள்ளன.சூப்பர் ஸ்டாருக்காக தயாரிக்கப்பட்ட கதையை எடுத்துக்கொண்டு அஜித்தை அனுகியுள்ளாராம் கேவி.ஆனந்த். மற்றொருபுறம் இயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்துள்ளாராம்.ஆனால்...

100வது நாளில் ‘ராஜா ராணி’...!

100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது அட்லியின் ராஜா ராணி.அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ் முதலானோர் நடிப்பில் வெளியான படம் ராஜா ராணி.பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருந்தார்.தமிழ் சினிமாவில் மாறுபட்ட விளம்பர யுக்திகளோடும், கதை சொல்லுதலோடும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இன்றுடன் 100வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ராஜா ராணி’.இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்களை கடந்து ஓடுவது என்பது அரிதான விடயமே.‘ராஜா ராணி’ அந்த சாதனையை புரிந்துள்ள...

வீரம் படம் முரட்டுக்காளை ரீமேக்..?

‘வீரம்’ படம் முரட்டுக்காளை ரீமேக் என்ற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துள்ளன.அஜீத், தமன்னா, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம்.விஜயா நிறுவனம் நடித்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள், ட்ரைலர் பார்த்த பிறகு, இது ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பியது.இந்நிலையில் நேற்று நடந்த வீரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து இயக்குனர் சிவாவிடம் கேட்டபோது, இந்தப் படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டது. ஆனால் முரட்டுக்காளையின் ரீமேக் அல்ல.அண்ணன், தம்பிகளின் கதை என்பதால் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த படத்தின் சாயலும்...

சூப்பர் ஸ்டாரை பாராட்டிய விஜய்...!

விக்ரமைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம்’ படத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்டாராம் விஜய்.கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.கன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர்.படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.இந்நிலையில் ஜில்லா யூனிட்டோடு இணைந்து இந்த படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்துள்ளார் விஜய்.இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும், மோகன்லாலின் நடிப்பிலும் அப்படியே சொக்கி போன விஜய், மோகன்லாலை வெகுவாக பாராட்டியுள்ளாராம்.மேலும்...

டீஸரில் சாதனை படைத்த 'ஜில்லா'...!

   ரசிகர்களை அள்ளிக்குவித்து சாதனை படைத்துள்ளது ஜில்லா டீஸர்.நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ஜில்லா.இப்படம் வருகிற 10ம் திகதி உலகம் முழுவதும் ரிலீசாகவிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.மேலும் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கிகொண்டிருக்கின்றன.அந்த வகையில் ரசிகர்களிடத்தில் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸரை க்ளிக் பண்ணியவர்களின் எண்ணிக்கையே சாட்சி என்று சொல்லலாம்.டீஸர் வெளியான இரண்டு நாட்களில் மட்டும்...
 
back to top