
புரட்சித் தலைஹிவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் விரைவில் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும்
வெளியாகவுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நடித்த “கர்ணன்” திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, புதிய திரைப்படங்களுக்கு சவாலாக இருந்ததுடன், வசூலையும் வாரிக்குவித்தது நினைவிருக்கலாம். இந்தப் புதிய ஐடியாவை அன்றைய மெஹாஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றுவதன் மூலம் தொடரலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பார்கள் போலும். அதனால் மக்கள் திலகத்தின் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
கடந்த 1965 ஆம் ஆண்டு பத்மினி பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார்,...