.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 13, 2014

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய...?

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..? இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள்.  உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு...

உறவுகள் வளர்வதற்கும் மனநிலையே முக்கியம்...!!!

வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார். நீர் பாய்ச்சினார். செடிகள் பெரிதாக வளரவில்லை. பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின. வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு. அதே தண்ணீர். அதே உரம்.அதே இடம்.இது எப்படி சாத்தியம்? கிழவர் சொன்னார், “அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்” என்று. உறவுகள் வளர்வதற்கும் மனநிலையே முக்கியம்...!...

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி..!!

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்....

உஷாரய்யா உஷாரு..! ஆன்லைன் ஷாப்பிங் டிப்ஸ்..!

ஆன்லைன் ஷாப்பிங்… ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்..! எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா ”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது,...

விமர்சனங்களைத் தாண்டி பொங்கல் ரேஸில் அபாரமாய் ஜெயித்த விஜய்..! அஜீத்..!

ஒரு ரேஸில் ஒரே நேரத்தில் இருவர் முதலிடத்தில் வந்து ஜெயிப்பதைப் போல, இந்தப் பொங்கலுக்கு வெளியான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் இரண்டு படங்களுமே அபாரமான வரவேற்பு பெற்றுள்ளன ரசிகர் மத்தியில்.  இது தயாரிப்பாளர்களையும், சினிமா உலகினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு ஹீரோவின் படம் தோற்றால், எதிர் முகாம் ரகசிய பார்ட்டி வைத்துக் கொண்டாடும் மோசமான மனநிலை பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நிலவுகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன் ரஜினி - கமல் படங்கள் சிலவற்றுக்குதான் இதுபோன்ற வரவேற்பும் கூட்டமும் குவிந்துள்ளது...

கர்ம வீரரின் அரிய தகவல்...!!

1953 ல், பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார். தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார். டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான். இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு...

கேப்டனின் அறியாத வாழ்க்கை வரலாறு..?

‘புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார்.  2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில்,...

தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு..?

தனுஷ்-சிவகார்த்திகேயன் நட்பில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரை காம்பையராக இருந்து சினிமாவில் ஹீரோவாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்த வகையில் டிவியில் இருப்பவர்கள் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற செண்டிமென்ட்டை உடைத்தெறிந்துவிட்டு தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து இந்த வருடம் மட்டும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டதில் தனுஷுற்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம். தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம்தான் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல்...

ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகியுள்ள ஜில்லா மற்றும் வீரம் படங்கள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன. பொங்கல் விருந்தாக அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டுமே பெரிய நடிகர்களின் படம் என்றாலும் ஜில்லாவும், வீரமும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன. தங்கள் தல, தளபதி படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் முண்டியடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் பிரிய நடிகர்களின் படத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வீரம், ஜில்லா படங்களை எடுத்துள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸான 3 நாட்களுக்குள் இணையதளத்தில் இந்த இரண்டு படங்களும் அப்லோட்...

ரீல் அந்து போச்சிடா..! ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள்..!

பட்டைய கிளப்பும் ஜில்லா-வீரம் பட பஞ்ச் வசனங்கள் பொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் “வீரம்”, விஜய்யின் “ஜில்லா” படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. பஞ்ச் வசனம் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியேரது படங்களில் பஞ்ச் கண்டிப்பாக இடம்பெறும். அதுபோலவே சமீப காலங்களாக அஜீத், விஜய் ஆகியோரது படங்களிலும் பஞ்ச் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும வீரம், ஜில்லா படங்களில் இந்த பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சில உங்களுக்காக, “வீரம்” பஞ்ச் வசனங்கள் • சந்தோஷம் வந்தா நாலுப்பேரோட பகிர்ந்துக்கணும். கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கணும். அவன்தான் மனுஷன். •...

‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடல் கட்: ஆத்திரத்தில் திரையரங்கை சேதப்படுத்திய ரசிகர்கள்..!

பொங்கலையொட்டி கடந்த 10ம் தேதி அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா படங்கள் திரைக்கு வந்தன. இரண்டு படங்களுமே நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. அதே சமயம் வீரம் படம் 2 மணி நேரம் 40 நிமிடமும் ஜில்லா 3 மணி நேரமும் ஓடக்கூடியதாக இருந்தது. ஜில்லா படத்தின் நீளம் குறித்து விஜய் ரசிகர்களும் விமர்சகர்களும் குறை தெரிவித்தனர்.  இதையடுத்து உடனடியாக படத்தின் 10 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. அந்த பத்து நிமிட காட்சிகளில் ‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலும் தூக்கப்பட்டு விட்டது. இதனிடையே நீக்கப்பட்ட பாடலை மீண்டும் சேர்க்கும்படி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கும் இயக்குனர் நேசனுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் பெரம்பலூரில் திரையரங்கு...

இந்த பொங்களுக்கு - சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை...

தேவையான பொருட்கள்: தோல் நீக்கிய முழு உளுந்து – ஒரு ஆழாக்கு, சாம்பல் பூசணிக்காய் – ஒரு துண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிது, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஐந்து, உப்பு – சுவைக்கு, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய். செய்முறை: வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வடை பக்குவத்தில் கல்லுரலில் நுரைக்க அரைத்துக் கொண்டு துருவிய வெள்ளை பூசணிக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள், பச்சை மிளகாய்த் துண்டுகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் சூடாகப் பொரித்து தேங்காய் சட்னியுடன் பறிமாறவும...

15 -ல் தொப்பையை குறைக்கலாம்.!!!!!!

1.நன்கு தூங்கவும் நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். 2.உப்பை தவிர்க்கவும் தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும். 3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை...

கச்சிதமாக இருப்பதே அழகு!

நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்: * பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி. * கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள். * ஆடை அணிவது முதலில் வசதிக்காக என்பது நினைவிருக்கட்டும். உடை உடலை கவ்விப் பிடிக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டாம். ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு. * வேலைக்கு போகும்...

நடிகை அஞ்சலிதேவி மரணம்.....

சிவாஜியுடன் “முதல் தேதி”, “நான் சொல்லும் ரகசியம்” படங்களிலும், எம்.ஜி.ஆருடன் “சக்ரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரப்ல்மான இவர் . தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம்.அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்கு கொண்டார். காக்கிநாடாவில்,...

இணையத்தில் கசிந்த சூப்பர் ஸ்டார் படம்..!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.மோகன்லால், மீனா, நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும் த்ரிஷ்யம் தொடர்ந்து திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல்லாக ஒடிக் கொண்டிருக்கிறது.படத்திற்கு வரவேற்பு இருப்பதால் திருட்டு விசிடிக்கள் வெளிவந்திருக்கிறது. இணையதளத்திலும் அப்லோட் செய்துவிட்டார்கள்.இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூர் கேரள டி.ஜி.பி பாலசுப்பிரமணியத்திடம் நேரில் புகார் அளித்துள்ளார்.அவரது உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் பொலிசார் படத்தை நெட்டில் விட்டவரை தேடியபோது ஒரு பேஸ்புக் பக்கத்திலும் படம் அப்லோட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த பேஸ்புக் முகவரியை தேடியபோது அது...

உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கும் வெங்கட்பிரபு..!

உலகநாயகன் அனுமதிக்காக காத்திருக்கிறாராம் இயக்குனர் வெங்கட் பிரபு. லிங்குசாமி படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு கல்யாண ராமன் என்ற தலைப்பினை வைத்துள்ளனர். ஏற்கனவே இதே தலைப்பில் கமல்ஹாசன் நடித்து பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் சூப்பர்ஹிட்டாக அமைந்தது. எனவே தான் இயக்கும் படத்துக்கு அந்த பெயரை வைப்பதற்கு அனுமதி தரும்படி கமலிடமும், பஞ்சு அருணாசலத்திடமும் கேட்க முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்க உள்ளார். ...

‘வீரம்’ படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்போவது - நீயா..? நானா..?

அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள ''வீரம்'' படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத் குமாரை வைத்து பாசம், ஆக்ஷன், காதல் கலந்த வீரம் படத்தை இயக்கினார். படம் பொங்கல் விருந்தாக கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது. செம மாஸ்:- வீரம் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் சிவாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். படம் செம மாஸ், சிவா இயக்கம் அருமை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். ‘வீரம்’ சிவா:- இத்தனை நாட்களாக அவர் ‘சிறுத்தை’ சிவாவாக இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல் அவர் ‘வீரம்’ சிவா என்று...

தல டக்கரு..! பாராட்டிய விஜய்.....

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா. இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜில்லா படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். மிகவும் சந்தோஷம். முதலில் எனது ரசிகர்களுக்கு நன்றி, படம் வெளியாகும் முதல் நாள் குளிரையும் பொருட்படுத்தாமல் திரையரங்குகளுக்கு வந்து அலங்காரம் செய்துள்ள காட்சிகளை காணொளியில் பார்த்தேன். இதன் பின்னால் இருந்த எல்லோருக்கும் நன்றி. மேலும் அஜித் அவர்களின் 'வீரம்' படமும் நன்றாக வந்துள்ளது என்று கேள்விப் பட்டேன்....

கீ போர்ட் - ஷார்ட் கோட்களின் தொகுப்பு.....

Alt + 0153….. ™… trademark symbol Alt + 0169…. ©…. copyright symbol Alt + 0174….. ®….registered trademark symbol Alt + 0176 …°……degree symbol Alt + 0177 …±….plus-or -minus sign Alt + 0182 …¶…..paragraph mark Alt + 0190 …¾….fraction, three-fourths Alt + 0215 ….×…..multiplication sign Alt + 0162…¢….the cent sign Alt + 0161…..¡….. .upside down exclamation point Alt + 0191…..¿….. upside down question mark Alt + 1………..smiley face Alt + 2 ……☻…..bla ck smiley face Alt + 15…..☼…..sun Alt + 12……♀…..female sign Alt + 11…..♂……m ale sign Alt + 6…….♠…..spade Alt + 5…….♣…… Club Alt + 3…………. Heart Alt + 4…….♦…… Diamond Alt + 13……♪…..eighth note Alt...
 
back to top