.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

எச்சரிக்கை.!!!! நான்ஸ்டிக் குக்வேர் பயன்படுத்துபவர்களே..!

இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஃதுஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு...

சுவாமி விவேகானந்தர் - ஒருவரின் பண்ணை வீட்டில் ?

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது....

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா..?

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம். என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு. ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன. ஆனால், அதில் தப்பிப்...

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை..!

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!!! எச்சரிக்கை ரிப்போர்ட் :- மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில் ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள்,...

டீ தூளில் - எது ஒரிஜினல்?எப்படிக் கண்டுபிடிப்பது?

ஏழைகளின் உற்சாக பானம், இப்படி பாஷாணமாக மாற்றப்படுவது எப்படி? இதோ சில பகீர் உண்மைகள்: இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் ‘திக்’ காகவே இருக்குமாம்! முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது! மஞ்சனத்தி இலை – குதிரை...

`ஐ` - ல் புதுமை அசத்தும் ஷங்கர்..!

 கற்பனையில் மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய, பிரம்மாண்டமான காட்சிகளை திரையில் சாத்தியமாக்கிக் காட்டுவதுதான் இயக்குநர் ஷங்கரின் ஸ்டைல். தொழில்நுட்பத்தில் புதிதாக எது வந்தாலும், உடனே அதனை முதல் ஆளாகப் பயன்படுத்தி விட வேண்டும் என்பதில் கமலுக்குப் போட்டியாக எப்போதும் களத்தில் நிற்பவர். திரையில் எவையெல்லாம் சாத்தியமில்லையோ அது அனைத்தையும் சாத்தியம்தான் என்று ஹாலிவுட்டுக்கு இணையாக நிலைநாட்டி வருபவர். தொழில்நுட்பத்தையும் காட்சியமைப்பையும் இணைப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான் என்றநிலையில் தற்போது விக்ரம், ஏமி ஜேக்‌ஷனை வைத்து இயக்கிவரும் ‘ஐ' படத்தில் என்ன புதுமையைச் சேர்த்து ரசிகர்களை மலைக்க வைக்கப் போகிறார் என்று விசாரித்தபோது, ஆச்சரியமூட்டும்...

8-ம் வகுப்பு தேறியவர்களா ?இத படிங்க.....

சில்லரை விற்பனைச் சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து பத்தாயிரம் இளைஞர் களுக்கு சில்லரை விற்பனையாளர் பணிக்கான குறுகியகால 21 நாள் திறன் பயிற்சியினை வழங்க திட்டமிட்டுள்ளது.இப்பயிற்சியானது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனங்களில் அளிக்கப்படும். இப்பயிற்சி தமிழக அரசால் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: இன்று (10.01.2014) முதல் சென்னை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, மதுரை, சேலம், விருதுநகர், கடலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, நாகர்கோவில்,...

தனுஷ்-விஜய் சேதுபதி இருவரும் இணையும் முதல் படம்...!

ஆர்யாவை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.ராதிகாவின் “ராடன் நிறுவனம்” மற்றும் லிஸ்டின் ஸ்டீபனின் “மேஜிக் பிலிம் புரொடக்ஷன்ஸ்” ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். உண்மைக்கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் தனுஷும் விஜய் சேதுபதியும் எதிரும் புதிருமாக கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்.தனுஷ்-விஜய் சேதுபதி இருவரும் இணையும் முதல் படம் இது. தற்போது “புறம்போக்கு” படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்துவரும் ”விஜய் சேதுபதி” அடுத்ததாக தனுஷுடன் இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிய வருகிறது.இதில் ”தனுஷ்” ஜோடியாக நடிக்க, நடிகை ”சமந்தா”வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய் சேதுபதிக்கு இந்த...

‘வீரம்’ – திரை விமர்சனம்...

  தங்களது 100வது தயாரிப்பாக தரமான ஒரு குடும்பத்துடன் சந்தோசமாக பார்க்கும் வகையில் படத்தை கொடுத்த ‘விஜயா புரொடக்‌ஷன்’ வெறும் 50 செக்ன்டகளில் தங்களுக்கான அறிமுகத்தை கொடுத்து படத்தை ஆரம்பிக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது எம்.ஜி.ஆர்-ன் படம் அடுத்து ரஜினியின் படம் என்று வரிசையில் காட்டிய பின்னர் ‘விஜயா புரொடக்‌ஷன்’ வழங்கும் அஜித்குமாரின் வீரம் என படத்தின் டைட்டில் தொடங்குகின்றது! அப்போதே படத்தின் வெற்றியை சொல்லாமல் சொல்லி முடிக்கின்றது தயாரிப்பாளர் நிறுவனம்!!! படத்தில் அஜித்துக்கு நான்கு தம்பிகள்.(இது எல்லோருக்கும் தெரிந்ததே..!!!) படம் ‘ஒட்டச்சரித்திரம்’ என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. படத்தில் தம்பிகள் தான் தனக்கு எல்லாமாக வாழும்...

``ஜில்லா`` - திரை விமர்சனம்

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத். அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக...

‘ஜில்லா’ ! ஜெயிக்குமா? - திரை விமர்சனம்...

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து...

இல்லத்தரசிகளுக்கு - அரசு அறிவிப்பு?

மானிய விலை சிலிண்டர்களி்ன் எண்ணி்க்கை 12 ஆக உயர்கிறது! மானிய விலை மூலம் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மானியம் மூலம் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கையை மத்திய அரசு ஒன்பதாக குறைத்தது. இதன் காரணமாக பல்வேறு தரப்பில் அதிருப்தி எழுந்தது.இது ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது. இதனையடுத்து சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.  இதனை தொடர்ந்து மானிய விலை சிலிண்டர்களி்ன் எண்ணி்க்கைய ஒன்பதலிருந்து 12 ஆக உயர்த்துவது என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளத...

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை..!

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை: புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக...

கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு – திரை விமர்சனம்

அக்கா, தம்பியாகிய கவிதாவும் சிவாவும் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். சிவா மற்றும் அவரது நண்பர்கள், அக்கா கவிதா மீது பேரன்பு கொண்டு பாசத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். கவிதாவிற்கு போலீசில் சேருவதற்கான கடிதம் வருகிறது. இதனால் சிவா மற்றும் அவரது நண்பர்கள் கவிதாவை கண்ணீர் மல்க போலீஸ் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஒரு நாள் சிவா, கவிதா ஒரு ஆபத்தில் சிக்குவதாக கனவு காணுகிறார். இதனால் பதறிபோய் அவருக்கு போன் செய்கிறார். ஆனால் போன் நம்பர் ஒர்க் ஆகாமல் போய் விடுகிறது. இதனால் துடித்து போகிறார். மறுநாள், கிராமத்திலுள்ள ஒரு தோட்டத்தின் உரிமையாளர் தனது தோட்டத்தில் மர்ம பை ஒன்றை பார்க்கிறார். அதை திறந்து பார்க்கும் அவர் அதிர்ந்து போகிறார். அதில் ஒரு...

விஜய்யின் இமேஜுக்காக உருவான கதை ஜில்லா...!

விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா நாளை ரிலீசாகிறது.இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:சூப்பர் குட் பிலிம்சின் 25வது ஆண்டில், 85-வது படமாக ஜில்லா உருவாகியுள்ளது. விஜய், மோகன்லால் இருவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்ததால், நாங்கள் சொன்னபடி பொங்கலையொட்டி படத்தை வெளியிடுகிறோம். கேரளாவில் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்றுள்ள மோகன்லால், நடித்ததற்கு சம்பளம் வாங்கவில்லை. எங்கள் நிறுவனத்துக்காக, பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜஹான், திருப்பாச்சி படங்களில் நடித்தார் விஜய். அந்த படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. அதுபோல் ஜில்லாவும் வெள்ளிவிழா கொண்டாடும். இந்தப் படத்தில் பேமிலி சென்டிமென்ட்டும்...

மூன்று வேறுபட்ட இசை வடிவங்களில் ஜில்லா ஆடியோ..?

இளைய தளபதி விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ஜில்லா திரைப்படத்தின் ஆடியோ நேற்று வேறுபட்ட வடிவங்களில் வெளியாகவுள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். ஜில்லா படத்தின் ஆடியோ தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் புதிய ஆடியோ வடிவமான ஆரோ 3D முறையிலும் மற்ற திரையரங்குகளில் 5.1 DTS மற்றும் டால்பி ஆட்டம்ஸிலும் வெளியாகவுள்ளது. ஜில்லா படத்தின் இசை ஏற்கெனவே ஹிட்டாகியிருப்பதால், இப்படத்தின் பின்னணி இசையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். ஜில்லா திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தலதளபதி படங்கள்...

தோள்பட்டை வாதத்திற்கு...

நன்றி நக்கீரன்... ...

மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு..!

``ஜெ.சி.டேனியல்`` - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு... 1930-ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம் அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார். இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல்....

விஜயகாந்த் மகனுடன் நடிக்கிறாரா விஜய்..?

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். விஜயகாந்த் சண்முகபாண்டியனை அறிமுகம் செய்துவைத்த நிகழ்ச்சிக்கு, இயக்குனர்-தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்று வாழ்த்தியிருந்தார். அந்த விழாவிலேயே ‘என் மகன்(விஜய்) ஒரு நல்ல பிரேக்குக்காக காத்திருந்த சமயத்தில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், சம்பளமே வாங்காமல் நான் கேட்ட ஒரே காரணத்திற்காக கதையே கேட்காமல் நடித்துக்கொடுத்தார்” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார் எஸ்.ஏ.சி. விஜய்க்காக விஜயகாந்த் செய்தது போல தற்போது விஜயகாந்த் மகன் சினிமாவில் அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்திலும் விஜய் நடித்தால் படத்திற்கு ஒரு நல்ல...

அஜீத் - விஜய்; பொங்கல் விருந்தை அடிச்சுக்காம சாப்பிடுங்கப்பா..!

எதிரெதிர் துருவங்களாக இருந்த அஜித்தும் விஜய்யும் இணைந்தது அஜித்தின் முயற்சியால் தான். ரசிகர்கள் அதிக எமோஷனாவதால் இனி இருவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் சொன்னதன் பின்பு தான் இந்த ஒரே நாள் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது. இந்த வருட பொங்கலுக்கு கைவிட்ட பழக்கத்தை கையிலெடுத்திருப்பது ஜில்லா டீம் தான். படம் துவங்கியபோதே ஜனவரி 10 ரிலீஸ் என அறிவித்து விட்ட வீரம் டீமுடன், பொங்கல் ரிலீஸ் என்று படப்பிடிப்பை துவங்கிய ஜில்லா டீம் 10-ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டது. ஜனவரி 10-ஆம் தேதிக்காக கிளைமேக்ஸ் காட்சிக்காக காத்திருப்பதுபோல் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இரண்டு திரைப்படத்தில் வரும் உண்மையான க்ளைமேக்ஸ் காட்சியும் அதிரடித்திருவிழாவாம்....

ஊர் சுற்றலாம் வாங்க.. - சென்னை ..!

சென்னை தலைநகரம் : சென்னை பரப்பு : 174 ச.கி.மீ மக்கள் தொகை : 4,216,268 எழுத்தறிவு : 3,079,004 (80.14%) ஆண்கள் : 2,161,605 பெண்கள் : 2,094,663 மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 24,231 அமைவிடம்: தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா ; ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன. வரலாறு : சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது :...
 
back to top