
நம்மாழ்வாரை உயிர்ப்பித்த ‘உழவன் தாத்தா’ பாடல்…
‘உழவன் தாத்தா வந்திருக்கேன்உழவன் தாத்தா வந்திருக்கேன்அறிவை வாங்கி பரிமாறுஅழிவை நோக்கி போராடுஉரமான உடலோடுஉரமில்லா பயிரோடு…என்று தொடங்குகிறது அந்த பாடல்…’தாஜ்நூரின் மயக்கும் இசையில் ஈசன் இளங்கோவின் ஈர்க்கும் வரிகளில் வேல்முருகனின் உருக்கும் குரலில் சேலம் மாநகரமே இந்த பாடலுக்கு ஆட்டம் போட, பொங்கல் திருவிழா அமர்க்களமாக அரங்கேறியது. இதுவரை பொங்கல் தினத்தன்று சினிமா பாடல்களை மட்டும் ஒலிபரப்பி அதற்கு ஆட்டம் போட்டு வந்த பலரும், இது என் பாட்டு என்கிற சந்தோஷத்தோடு ஆடிப் பாடினர்.இப்படியொரு பாடல் உருவாக காரணமாக இருந்த ஈசன் இளங்கோ என்ன சொல்கிறார்?“சமீபத்தில்தான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை பறிகொடுத்தோம்....