.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Saturday, February 1, 2014

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா..!

ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் ‘ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு  எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பங்கேற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்ட கேஜ்ரிவால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.இந்தப்...

கணவருக்கு பிடித்த நடிகை போல மாறிய மனைவிக்கு நேர்ந்த கதி..!

சவுதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, அதையடுத்து முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை கணவர் விவகாரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டது அந்நாட்டு ஊடகங்களின் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணின் கணவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியானின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்துள்ளார். அவர் நடித்த படங்களை தொடர்ந்து வீடியோவில் போட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து வந்த கணவனின் போக்கை மாற்ற அவரது மனைவி ஒரு முடிவெடுத்தார்.அதன் படி முதலில், நடிகை கிம் கர்டஷியான் பாணியில் சிகையலங்காரம் செய்துக் கொண்டார். நடிகையின்...

Tuesday, January 21, 2014

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம - மத்திய அரசு வெளியீடு..!

அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்:- *முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது...

Monday, January 20, 2014

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க..!

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது  நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும்  வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில்  வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை...

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்..!

தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய...

ஜாக்கிங் செல்பவரா நீங்கள்? - எச்சரிக்கை..!!!

உடல் பருமனாக உள்ளவர்கள் தங்கள் எடையை குறைக்க ஜாக்கிங் செல்கின்றனர். ஆனால் அது ஒரு நல்ல பயிற்சி அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியதாவது:-உடல் எடையை குறைக்க பெரும்பாலானவர்கள் மெதுவாக ஓட்டப்பயிற்சி (ஜாக்கிங்) எப்போதும் சிறந்ததாக இருக்காது. பொதுவாக உடல் எடை அதிகரிப்பதில் கொழுப்பின் பங்கு அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.கொழுப்பு முக்கியமானது. இது தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது.எனவே இது மேலும் உடல் எடையைதான்...

பெற்றோரால் பேஸ்புக்-கில் இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி..!

கட்ந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக ‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்’ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் “அட்வர்டைசிங் பிளாட்பார்மில்” உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர்.இது கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும்போது 110 கோடி குறைவு. மேலும் இந்த வலைதளத்தில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ,...

Saturday, January 18, 2014

காணவில்லை..! - உணர்வே இல்லாதவர்களிடம் நீதிக் கிடைக்காது

 வருடந்தோறும் குழந்தைகள் காணாமல் போகிறார்கள், பெற்றவர்களைத் தவிரத் துடிப்பவர் யாருமில்லை இங்கே.நம்முடைய உறவு ஒன்று இறந்து விட்டால், சிறிது காலத் துயரத்திற்குப் பின் மனம் ஒரு வகையில் அந்த இழப்பில் இருந்து மீண்டுவிடும். ஆனால், நம்மைச் சேர்ந்தவர் ஒருவர் காணாமல் போய்விட்டால், அதுவும் நம் குழந்தைக் காணாமல் போய்விட்டால், அந்தத் துடிப்பு, அந்தச் சோகம் வாழ்நாள் முழுமைக்கும் ஆறாது, வாழ்நாள் என்று பெற்றோருக்கு மிச்சம் இருந்தால்...சிறு வயதில் படித்திருக்கிறேன், 'சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம், துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்' என்று. அந்தப் புத்திர சோகத்தை, இருபத்தைந்து வயதில் மனநிலைத் தவறிக் காணாமல் போய்விட்டத் தன் மகனை எண்ணி...

‘ சிப் ' - ஐ வைத்து சீப்பா நடக்கும் நாடுகள்...!

இனிமேல் ஒரு பயல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பான்? ஓலைச்சுவடியில் கோட் வேர்ட்ஸில் கடுதாசி எழுதி மஞ்சள் பொடி போட்டு, மெழுகு தேய்த்து டீகோட் செய்து வாசித்துக்கொள்ள வேண்டியதுதான். கணக்கு வழக்குகள் இதர விவரங்கள் அனைத்தையும் கையாலெழுதும் காலம் திரும்பி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள். கோப்புகளை டிஜிடல் வடிவில் சேமித்து வைத்தால் சாவு கிடையாது என்று எண்ணியிருந்தால் நீங்கள் செத்தீர்கள். மானசீக மர்ம தேசத்தில் பட்டுத்துணி சுற்றி ஏதாவது பாதாள அறைக்குள்தான் புதைத்து வைக்கவேண்டியிருக்கும். எல்லாம் கலியின் சதி. மீண்டும் அமெரிக்கா ஓர் அக்கப்போரில் சிக்கியிருக்கிறது. அயோக்கியத்தனத்தின் அடுத்த நீட்டல் விகாரம் ஒரு பெரும் விவகாரமாக வெடித்திருக்கிறது. அமெரிக்காவில்...

Friday, January 17, 2014

IMEI நம்பரை வைத்து திருடிய மொபைலை மீட்க..!

உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும். இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :     பெயர்(NAME)     முகவரி(ADDRESS)     போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)  அந்த...

Thursday, January 16, 2014

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?  இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்..!* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம்...

வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை..!

வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற உத்தரவை இந்த      ( ஜனவரி ) மாதம் முதல் அமலாக்கப் போவதாக, வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம். இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும் மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான...

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..!

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..!  மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும்.ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும்...

Wednesday, January 15, 2014

ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறைகின்றது..!

அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக ஆண் குழந்தைகளை பெறுவதால் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அதிக ஆண் குழந்தைகள் பெறுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தாய்மார்கள் விரைவில் வயதானவர்கள் ஆகின்றனராம். ஆண் குழந்தைகள் பெறுவதால் தாய்மார்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்கிறதாம். அதனால் தாய்மார்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களின் உடல் வீக்காகிவிடுகிறதாம்.இதனால் அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிக...

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்..!

ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது..! குழந்தைகளின் பிரியா பிஸ்கெட் ஆகிவிட்டது ஓரியோ.கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும்,...

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...! இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.  'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான...

பெண் நோயாளிகளிடம் வரம்பு மீறும் ஆண் டாக்டர்கள் - புகார் கொடுக்க...

 இந்தியாவில் மருத்துவ சிகிச்சை முறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ கம் மருத்துவத்துறையில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மிகவும் அரிதானதாக சொல்லப்படும் இதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் சர்வ சாதாரணமாக குறைந்த செலவில் சென்னையில் செய்யப்படுகிறது.ஆனால் தனியார் மருத்துவ மனை மற்றும் தனியார் கிளினிக்கு களுக்கு சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளிடம் ஒரு சில டாக்டர் கள் வரம்பு மீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை பெரும் பாலான பெண் நோயாளிகள் வெளியே சொல்ல தயங்குகின்ற னர். இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் சிலர், தங் களது அத்துமீறல்களைத் தொடர் கின்றனர்.ஒரு சில...

Tuesday, January 14, 2014

கணினியில் இருந்து கண்களைக் காக்க ..!

கணினியில் இருந்து கண்களைக் காக்க..! கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ... 1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும். 2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில்...

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..   இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.  ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால்,...

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்..!   இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்…..• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே...
 
back to top