
சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்கும் போது மேலிருந்து கீழே விழும் நிலையில் இருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் அர்ஜூன் இவரை பார்த்ததும் வீட்டிற்குச் சென்று காப்பாற்றுகிறார்.
இதை பார்க்கும் சுர்வின் சாவ்லாவின் அப்பாவான மனோபாலாவும் அவரது மனைவியும், இவர்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் சம்மதத்துடன் அர்ஜூனை காதலில்...