.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, December 29, 2013

ஜடமாகவே இருக்கிறேன்...கவிதை!!!

பணம் கிடைத்திருந்தால்பணக்காரனாக இருந்திருப்பேன்...நல்ல குரல் வளம் இல்லைஇருந்திருந்தால் பாடகனாக இருந்திருப்பேன்...நடிக்க தெரியவில்லைதெரிந்திருந்தால் நடிகனாக இருந்திருப்பேன்...நல்ல படித்திருந்தால்சொல்லி இருக்க முடியாது ஆட்சியாளராக இருந்திருப்பேன்...எனக்கெல்லாம் ஒட்டு கிடைக்காதுகிடைக்குமாயின் மந்திரியாக இருந்திருப்பேன்...நல்ல நண்பர்கள்இருந்தால் இன்னும் நல்லவனாக இருந்திருப்பேன்...விமானம் பார்த்தது கூட இல்லைபிறகு எதற்கு அந்த வெளிநாட்டு கனவு...காதலி கிடைக்காததால்பித்தனாக இருந்திருப்பேன்...இன்னும் சொல்ல போனால்மனிதர்களை காணவில்லைஅதனால் மனிதனாக மாறாமல்ஜடமாகவே இருக்கிறேன்...

Saturday, December 28, 2013

சொல்லாதீர்கள்... கவிதை?

எங்களை இல்லாதவர்கள்  என்று சொல்லாதீர்கள்... எப்போதும் குறையாத வறுமையை  வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...! எங்களை இயலாதவர்கள் என்று சொல்லாதீர்கள்.... அடுத்தவருக்கு தெரியாமல்  தனித்து அழமுடியும் எங்களால்..! எங்களை வீரமற்றவர்கள்  என்று சொல்லாதீர்கள்... பசியை எதிர்த்து போராடும்  தைரியம் இருக்கிறது எங்களிடம்..! எங்களை திக்கற்றவர்கள்  என்று சொல்லாதீர்கள்.... எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது  எங்கள் வறுமை ஜாதிதான்..! எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்  என்று சொல்லாதீர்கள்... எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்  குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

Tuesday, December 24, 2013

உன்னை இன்றும் அம்மா என்று கூப்பிட ஆசை வருதே ஏன்..?

கால்களை உதைத்து  கர்ப்பப்பையை  கிழித்தாகிவிட்டது.தொப்புள்கொடியை  யாரோஅறுத்தனர். முதல் பால் அருந்த  முன்வரிசையில்  காத்திருந்தேன். யாரும் என்னை கவனிப்பவராக இல்லை.விட்டேன் ஒரு  குவா குவா  சத்தம்  சாதம் ரெடி !ஓ பிள்ளைக்கு பசிக்குது  நீங்களே பால் குடுங்க  நாங்கள் வெளியில் நிக்கிறோம்.கண்ணை மூடியிருந்த இருட்டிலும் ஏதோ கரங்கள் என்னை தூக்கி மார்போடு அணைத்தது  அப்பொழுது எரிந்தது  என்னிடம் முதல் முறையாக அகல் விளக்கு.பன்னீர்க்குடத்து  நீரையெல்லாம்  பகல் இரவாய் குடித்த எனக்கு பத்தினியின் முலைமார்பில் முதல் விருந்து முதல் அமிர்தம்.யாரப்பா அது...

கூகிள் சொல்லாது இறையின் இரகசியம் !

விதைக்குள் விருட்சம்  உறங்கியதெப்படி  விசித்திர வானில்  வாழும் அண்டங்கள் எப்படி  பூவுக்குள் தேன்  பிறந்தது எப்படி  பூமி தன்னையும் சுற்றி சூரியனையும்  சுற்றுவது எப்படி  பனித்துளி புல்லில் அமர்ந்தது எப்படி  பசுவுக்கு நாளும்  பால் சுரப்பது எப்படி  பகலும் இரவும்  மீன்கள்  தூங்காதிருப்பது எப்படி  பாதி நிலவும் வளர்வது எப்படி  பசியும் தாகமும் வருவது எப்படி  எண்ணமும்  செயலும் உருவாகிறதே எப்படி  உடலுக்குள் உயிரும் ஒட்டியிருப்பது எப்படி  சும்மா கசக்கு  மூளையை கொஞ்சம்  கூகிள் சொல்லாது  இறையின் இரகசியம்...

Sunday, December 22, 2013

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க?

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:அன்புள்ள அப்பா,மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை...

காதலின் வயது எது???

வாழ்க்கை என்றால் என்ன என்ப...தைபுரிந்து கொள்ள இயலாத வயதில் உனக்குஎதற்கு காதல்!!!கல்வி கற்கும் வயதில் நீ ஏன் காதலை பற்றி கனவு காண்கிறாய்?கொஞ்சம் சிந்தி!முதலில் நீ உன் காலில் நிற்கத்தக்கதகுதியைபெற்றுக் கொள்...அதற்கு பின் தாராளமாய் நீ காதலிஅப்போது புரியும் வாழ்க்கைபயணம் என்பது எத்தனை கரடுமுரடான தென்று.உங்கள் கருத்துக்கள் வரவேற்கதக்கது...

Thursday, December 19, 2013

பிரிவு - கவிதை?

வலி மிகுந்த  வாழ்க்கை பயணம்... வழி நெடுக புதுமுகங்களின் சந்திப்பு... ஒவ்வொரு முகமும்  ஒவ்வொரு உறவாக  மனதில் பதிகின்றன... ஆனால்... எந்த உறவும் இறுதி வரை  உடன் வரபோவதில்லை... ஏதோ ஒரு நிமிடத்தில்  பிரிந்தாக வேண்டிய கட்டாயம்... அந்த நிமிடம் மரணமாகக்  கூட இருக்கலாம்...

Wednesday, December 18, 2013

புதுக்குறள்.....?

                                            ******புதுக்குறள் *******1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்கமூஞ்சியில் குத்தி விடல்...3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும் செய்வது அரசியல்வாதிக்கியல்பு...4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால் சோகாப்பர் hack செய்யப்பட்டு.5.விரும்பிய மனம் விரும்பா விடின் துரும்பா இளைப்பார் தூய காதலர்..6.ரன்...

தாய் மடியில் தலைவைத்த காலம் வருமா ?

வயல்வெளி பார்த்துவறட்டி தட்டிஓணாண் பிடித்துஓடையில் குளித்துஎதிர்வீட்டில் விளையாடிஎப்படியோ படித்த நான்ஏறிவந்தேன் நகரத்துக்கு !சிறு அறையில் குறுகிப் படுத்துசில மாதம் போர்தொடுத்துவாங்கிவிட்ட வேலையோடுவாழுகிறேன் கணிப்பொறியோடு !சிறிதாய்த் தூங்கிகனவு தொலைத்துகாலை உணவு மறந்துநெரிசலில் சிக்கிகடமை அழைக்ககாற்றோடு செல்கிறேன்காசு பார்க்க !மனசு தொட்டுவாழும் வாழ்க்கைமாறிப் போகுமோ ?மௌசு தொட்டுவாழும் வாழ்க்கைபழகிப் போகுமோ ?வால்பேப்பர் மாற்றியேவாழ்க்கைதொலைந்து போகுமோ ?சொந்த பந்தஉறவுகளெல்லாம்ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?வாழ்க்கைதொலைந்து போகுமோமொத்தமும்!புரியாதுபுலம்புகிறேன்நித்தமும்!தாய் மடியில் தலைவைத்துநிலவு முகம் நான் ரசித்துகதைகள் பேசிகவலைகள் மறந்த காலம்இனிதான் வருமா ?இதயம் நனைத்தஇந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவதுஇனி கிடைக்குமா ?சொந்த மண்ணில்சொந்தங்களோடுசோறு திண்பவன்யாரடா ?இருந்தால் அவனேசொர்க்கம் கண்டவன...

வெளி நாட்டு வாழ்க்கை....

வெளி நாட்டு வாழ்க்கை....தெரியாத ஊர்...அறியாதமொழி...புதிதான சூழல்...புரியாத சுற்றம்...அனைத்தும் தாண்டி நாம் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...முதலில் வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம் தகுதியானவர்கள் இல்லை பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும் தகுதியானவர்கள்...இங்கே முடிந்தால் சாப்பிடுவோமே தவிர மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...முடிவெட்டினால் கூட ஒட்ட வெட்டுவோமே தவிர ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...இது எங்களின் கஞ்சதனமில்லை நான் அசிங்கமானாலும் பரவாயில்லை என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற அபூர்வ குணமே....அது போல வெளிநாட்டு வாழ்க்கை சில பிரிவை தந்தாலும் பொருத்துக்கொள்வோம் ஏனென்றால்...

Monday, December 16, 2013

என் பெயர் என்ன ???.

என் பெயர் என்ன ???. நீ அழுத போது  உன்னை தரதரவென்று  இழுத்துப் போய்  பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன்  படித்து பெரிய ஆளாக  வர வேண்டும் என்ற எண்ணத்தில்  இன்று நான் அழுகிறேன்  என்னை இழுத்துப் போய்  முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே  அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று  பத்துமாதம் உன்னை வயிற்றில்  சுமந்தபோது பாரமாக  நான் நினைக்கவில்லை  உன் பத்தினி வந்ததும்  உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக  இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே  நீ ஓடி ஓடி விளையாடிய போது  நீ செல்லும் இடமெல்லாம்  உன் பின்னாலே வந்து  உனக்கு சோறு ஊட்டி  உன் வயிறு நிறைந்ததில்  என் வயிறும் மனமும்...

கனா காண்கிறேன் - கவிதை!

பல்லாங்குழி ஆடிய திண்ணை  பாண்டி ஆடிய தெரு வீதி பட்டம் விட்ட மொட்டைமாடி பாடித் திரிந்த வயல் வெளிதுரத்திப் பிடித்த தும்பி பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி காத்துக் கிடந்த கனமழை விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி விரட்டிச் சென்ற டயர் வண்டி திருடித் தின்ன மாங்காய் தோப்பு  திட்டித் தீர்த்த காவல்காரன்  அசைந்தாடிய ஆலமர ஊஞ்சல்  ஆற்றைக் கடந்த பரிசல்  அல்லி பூத்தக் குளம்  அரசமரத் தடி பிள்ளையார்  என அத்தனை நினைவுகளையும் சுமந்து சென்ற நெஞ்சம் தேடுது, எங்கே தொலைந்தது? நான் பார்த்த ஊர் என..கனா காண்கிறேன்.....

கணிப்பொறி தமிழா...

கணிப்பொறி தமிழா உன் கண்களை கணணி திரை விட்டு கழட்டு!ஏ.சி  அறையில் இருந்து எழுந்து வா !கிளைகளைப் பரப்பும் அவசரத்தில் வேர்களை மண்ணிலிருந்து  வெட்டி விடாதே!நீ படித்த பழைய பள்ளிக் கூடத்தைப் போய்ப் பார்!அதன் மேற்கூரையில் உன் பிஞ்சு சிரிப்பு ஒட்டி இருக்கும்!நீ பிறந்த ஆஸ்பத்திரி எதுவென்று தேடு அதன் வாயிலில் நின்றொரு புகைப் படம் எடுத்து ரசி!நீ ஓட்டிய முதல் நடைவண்டி இன்சாட் 5 ஐவிட முக்கியமானது அதை பாதுகாத்து வை!நீ ஆடிய ஊஞ்சல் மரத்தின் தோள்களில் கொஞ்சம் தோழனாய் சாய்ந்து நில்!நீ ஆனா ஆவன்னா எழுதிய சிலேட்டுப் பலகை கிடைத்ததால் ஆஸ்கார் விருதாய் கருதிவரவேர்ப்பறையில் மாட்டி வை!நீ குரங்கு பெடல் போட்ட சைக்கிளை கண்டெடுத்து உன் காருக்கருகில் நிறுத்திக்கொள்!நீ...

Saturday, December 14, 2013

அழுவதுக் கூடச் சுகம் தான் - கவிதை!

அழுவதுக் கூடச் சுகம் தான்  அழவைத்தவரே அருகில் இருந்து  சமாதானம் செய்தால்...காத்திருப்பது கூடச் சுகம் தான்  காக்கவைத்தவர் அதற்கு தகுதி உடையவரானால்..பிரிவு கூடச் சுகம் தான் பிருந்திருந்த காலம் அன்பை  இன்னும் ஆழமாக்கினால்..சண்டைக் கூடச் சுகம் தான்  சட்டென முடிக்கு கொண்டு வரும்  சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்  முகத்தில் புன்னகையை மட்டும்  வரவழைத்தால்..ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்  அக்கறையையும் மட்டும்  வெளிப் படுத்தினால்..விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்  விவாதத்தை விட உயர்ந்தது உறவு  என்றப் புரிதல் இருந்துவிட்டால்..துன்பம் கூடச் சுகம்...

தன்னில் எது சமூக மாற்றம் ? கவிதை!

தன்னில் எது சமூக மாற்றம் ?தேவைக்கு அதிகமாய்  எதையும்  சேர்க்காமல் இருப்பது.வீட்டில் எது சமூக மாற்றம் ?அவரவர் வீட்டுக்குப்பையை  அடுத்தவீட்டு வாசலுக்கு  தள்ளாதிருப்பது. வீதியில் எது சமூக மாற்றம் ? மற்றவர் வைத்த  மரங்களெனினும்  பற்றுவைத்து பராமரிப்பது. சாலையில் எது சமூக மாற்றம் ? பின்னே ஒலி எழுப்பும் வாகனத்திற்கு  முன்னே செல்ல வழிவிடுவது. ஊரில் எது சமூக மாற்றம் ? இன்னொரு இனத்தின்  இழவிற்கு  கண்ணீரோடு கலந்துகொள்வது. மாநிலத்தில் எது சமூக மாற்றம் ? வீணாய் கடல்சேரும் முன்  தானாய் மனமுவந்து  தண்ணீரை திறந்துவிடுவது. நாட்டில் எது சமூக மாற்றம் ? மரபணுக்களில் ஊறிப்போன  ஊழல் தொற்றை  அறவோடு...

விருப்பமே ஆசையின் காரணம் - கவிதை!

விருப்பமே ஆசையின் காரணம்  ஆசையே கடனுக்கு காரணம்  அன்பே கடமைக்கு காரணம்  பண்பே உயர்வுக்கு காரணம்  பணமே உழைப்பிற்கு காரணம்  பகையே போருக்கு காரணம் வெற்றியே விருப்பத்திற்கு காரணம் அடிமைத்தனமே விடுதலைக்கு காரணம் ஆதிவெடிப்பே ஓசையின் காரணம்  ஓசையே தமிழுக்கு காரணம்  தமிழே உலகமொழிகளுக்கு காரணம்  பக்தியே அருளின் காரணம்  நிறைவே பூரணத்தின் காரணம்  பிறப்பே தந்தையின் காரணம்  வாழ்வே தாயின் காரணம்  முக்தியே இறைவனின் காரணம்  முடிவே உனது காரண...

Friday, December 13, 2013

அட அப்பாவி முதலமைச்சரே...!!

எங்களுக்காக எங்கும் கல்விக் கூடங்கள் திறந்தாய்...சீருடைத் திட்டத்தினால்பள்ளிகளில் ஏழை, பணக்காரன் பிள்ளைகள் என்கிற பாகுபாடுகள் நீக்கினாய்...இலவச மதிய உணவுத் தந்தாய்...அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளித்தாய்...எல்லாக் கிராமங்களிலும் இரவுப் பாடசாலைகள் திறந்தாய்...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் அதில் எதிலாவது உனக்கான முத்திரையோ,அடையாளமோ உண்டோ...?எல்லாக் கல்விகூடங்களிலும் உன் படமாவது உண்டா...?உன்னால் படித்த எங்களை தவிர உனக்கு வேறு அடையாளம் உண்டா...?எம் "பச்சை தமிழரே"பார்த்தீரா இன்றைய தலைவர்களை,இவர்கள் அறிமுகம் படுத்தும் ஒவ்வொன்றிலும் இவர்களது அடையாளங்களை...

Thursday, December 12, 2013

வேதனை!

100 கிலோ அரிசி மூட்டை  தூக்குபவனுக்கு  அதை வாங்க  சக்தி இல்லை. 100 கிலோ அரிசி மூட்டை வாங்குபவனுக்கு  அதை தூக்க  சக்தி இல்லை....

Tuesday, December 10, 2013

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!

காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...கையை அறுத்துக்குங்க அதுவும் தப்பு இல்லை....ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க தகுதியானவங்களா இருக்கணும்...!தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும் முட்டாள் தனம்..அந்த முட்டாள் தனத்த ஒரு போதும் பண்ணாதிங்க...ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த காதலே அர்த்தமற்றதாகி விடும்.அது ஒரு தலை காதலா கூட மாறிடும்.பரஸ்பரம் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா தான் காதல்...ஒருத்தங்களுக்குபிடிச்சிருந்தா அது வெறும் நேசம் நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்க.நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில் சிறகடிச்சுப் பறக்காம நடைமுறைக்கு சாத்தியமானதான்னு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.உங்களை...

சிந்தனை சிதறல்கள்!

மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!-மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்-மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!-மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.-மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?-வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்-வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்-அவன் வாய் வாழைப்பழம், கை கருணைக்கிழங்கு-மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது-முதலையும் மூர்க்கனும் கொண்டது வி...
 
back to top