.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label கீரைகள். Show all posts
Showing posts with label கீரைகள். Show all posts

Friday, November 22, 2013

ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் கீரை பற்றிய குறிப்பு !

 * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். * முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. * இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம்...

Friday, November 15, 2013

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!

மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.வெளி மூலம்:முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு,...

Wednesday, September 25, 2013

குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!

அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது. வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக...

 
back to top