.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Sunday, November 9, 2014

ஜெய்ஹிந்த் 2 (2014) - திரைவிமர்சனம்

சென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்கும் போது மேலிருந்து கீழே விழும் நிலையில் இருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் அர்ஜூன் இவரை பார்த்ததும் வீட்டிற்குச் சென்று காப்பாற்றுகிறார். இதை பார்க்கும் சுர்வின் சாவ்லாவின் அப்பாவான மனோபாலாவும் அவரது மனைவியும், இவர்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் சம்மதத்துடன் அர்ஜூனை காதலில்...

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா (2014) - திரைவிமர்சனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி வருகிறார்கள் விமல் மற்றும் சூரி. இவர்கள் வேலை வெட்டி ஏதும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த ஊரில் உள்ள மதுபானக் கடைகள் இவர்களால் மூடப்படுகிறது. இதனால் அந்த ஊரில் உள்ள பெண்கள் இவர்களை வாழ்த்துகிறார்கள். அதில் ஒரு பெண் சூரி மீது காதல் கொள்கிறாள். சூரியும் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். காதலித்த முதல் நாளே வீட்டுக்கு தெரியாமல் சூரியும், அந்த பெண்ணும் ஊரை விட்டு சென்னைக்கு ஓடிச்செல்ல முடிவெடுக்கிறார்கள். இவர்களுக்கு விமல் உதவி செய்கிறார். அப்போது, தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் வைத்து, சூரி ஒரு 'அன்னாடங்காச்சி' என்பதை அந்த பெண்ணிடம் விமல் கூறிவிடுகிறார். இதனால் காதலி...

Wednesday, November 5, 2014

காதலுக்கு கண்ணில்லை (2014) - திரைவிமர்சனம்

நாயகன் முரளி (ஜெய் ஆகாஷ்) காதலுக்கு கண்ணில்லை என்னும் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும், இப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெறுகிறார். அப்போது அந்த விழாவிற்கு வந்திருக்கும் ஷிவானி (நிஷா) முரளியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்னர் முரளியிடம், தான் அவரது ரசிகை என்றும் அவரை நேசிப்பதாகவும் கூறுகிறார். இதை முரளியுடன் இருந்து கவனித்த முரளியின் அம்மா இந்து, ஷிவானியை ஒரு நாள் வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு சென்று விடுகிறார். அதன்பின்னர் ஷிவானி, முரளி குடும்பத்துடன் பழக ஆரம்பிக்கிறார். முரளியின் அம்மாவிற்கு ஷிவானியை பிடித்து விடுகிறது. ஆதலால் முரளியிடம் ஷிவானியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். முரளியும் தன் அம்மாவின்...

Saturday, February 1, 2014

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்..!

திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும்.வேறென்ன சொல்ல?இனி பார்த்துத் தொலைத்த படத்தின் கதையைப் பார்ப்போம்:கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன்...
 
back to top