.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label தமிழனின் கலைகள்!. Show all posts
Showing posts with label தமிழனின் கலைகள்!. Show all posts

Saturday, January 4, 2014

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?கைரேகை பலன்கள்:பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் எமது ஆய்வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும், இடக் கை ரேகையையைப் பார்த்து 40...

Tuesday, December 31, 2013

குளத்தில் சங்கு பிறக்கும் அதிசய கோவில்!

வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி. இங்கு சுனை ஒன்றும் உள்ளது.திருக்கயிலையில் பரமேஸ்வரன்– பார்வதி திருமணம் நடைபெற்றவுடன், ஈசன் பார்வதி தேவியுடன் தனியாக எழுந்தருளி அருள்புரிந்த இடம் திருக்கழுக்குன்றம். மேலும் திருவாலங்காட்டில் காளியுடன்...

Sunday, December 29, 2013

உதடு ஒட்டாத குறள்(கள்) ....?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன் -341         ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (திரு மு.வ உரை)        எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல். – 489         கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். (திரு மு.வ உ...

Wednesday, December 25, 2013

பழைய கணக்கீட்டு முறைகள்..!

தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே8அணு - 1தேர்த்துகள்8தேர்த்துகள் - 1பஞ்சிழை8பஞ்சிழை - 1மயிர்8மயிர் - 1நுண்மணல்8நுண்மணல் - 1கடுகு8கடுகு - 1நெல்8நெல் - 1பெருவிரல்12பெருவிரல் - 1சாண்2சாண் - 1முழம்4முழம் - 1கோல்(அ)பாகம்500கோல் - 1கூப்பீடு...

Tuesday, December 24, 2013

மறந்து போன மருத்துவ உணவுகள்....?

                                               பிரண்டைச் சத்துமாவு தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக...

" இசைத் தூண்கள் " - உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை?

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால்...

Sunday, December 22, 2013

வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.மனித...

வர்மக்கலை! அதிசயம்!

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.வர்மம் என்றால் என்ன?உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே...

Wednesday, December 18, 2013

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!" - பழமொழி விளக்கம்!

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"நேர் விளக்கம்நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.அறிந்த விளக்கம் :உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.அறியாத விளக்கம் :இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.இதன் விளக்கம்,நாயகன் = கடவுள்"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்...

Sunday, December 15, 2013

களவும் கற்று மற - அறிந்த விளக்கமும் அறியாத விளக்கமும்!

களவும் கற்று மற.அறிந்த விளக்கம் :திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவு காதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது. தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.அறியாத விளக்கம் :மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும். இதில் கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்ட...

நில அளவைகள்

1 ஹெக்டர் : 2ஏக்கர் 47 சென்ட்1 ஹெக்டர் : 10,000 சதுர மீட்டர்1ஏக்கர் : 4046.82 சதுர மீட்டர்1ஏக்கர் : 43,560 சதுர அடிகள்1ஏக்கர் : 100 சென்ட்1சென்ட் : 435.6 சதுர அடிகள்1சென்ட் : 40.5 சதுர மீட்டர்1கிரவுண்ட் : 222.96 சதுர மீட்டர் ( 5.5 சென்ட்)1கிரவுண்ட் : 2400 சதுர அடிகள்1மீட்டர் : 3.28 அடிகள்1அடி : 12 இஞ்ச் ( 30.48 செ.மீட்டர் )1மைல் : 1.6 கிலோ மீட்டர்1மைல் : 5,248 அடிகள்1கிலோ மீட்டர் : 0.6214 மைல்1இஞ்ச் : 2.54 செ.மீ.640 ஏக்கர் : 1 சதுர ம...

Sunday, December 8, 2013

ஒத்த பழமொழிகள்!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.· முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.· அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.· கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.· எறும்பூரக் கல்லும் தேயும்.தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்திலோ,செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும்.அதை அந்த குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும்.ஆனால் விழுந்துவிடாது.அவ்வளவு பலமாகஎப்படி அந்த தூக்கணாங் குருவி கட்டுகிறது?அது ஒவ்வொரு புல்லாக எடுத்துவந்து மிகவும் நுணுக்கமாக கட்டும்.சிறு பிழை ஏற்பட்டால் கூட அந்த கூடு கீழே விழுந்துவிடும்.மீண்டும் மீண்டும் அந்த கூடு கீழே விழுந்தாலும் குருவி தன் முயற்சியை கைவிடுவதில்லை.அதுவும் மீண்டும் மீண்டும் புற்களை எடுத்து வந்து கூடை கட்ட ஆரம்பிக்கும்.இறுதியில் ஒரு உறுதியான கூடு கிடைக்கும்.தூக்கணாங் குருவி கூடுஅதை விடுங்கள்.ஒரு பாறையில் விழுந்த ஆல மரத்தின்...

Saturday, December 7, 2013

ஓரெழுத்து சொற்கள் தமிழில்!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன, அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன்ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திருமகள் சே -----> எருது, அழிஞ்சில் மரம் சோ -----> மதில் தா -----> கொடு, கேட்பது தீ -----> நெருப்புது -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு தூ...

Thursday, December 5, 2013

ப்ராண சக்தி! கட்டுரை!

 உயிரின் மூலப்பொருள்.பிரபஞ்சம் ஆற்றல் வடிவமானது. பிரபஞ்சத்தின் ஆற்றல் பல வடிவங்களில் இருந்தாலும். அதன் மூலத்தன்மை ஒன்று தான். ஈஷாவாசிய உபநிஷத் இதை மிகவும் எளிய வடிவில் விளக்குகிறது. ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம். பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்கள் தனியே பிரிந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது. பஞ்சபூத ஆற்றல் ஒருங்கிணைந்து பூமியை இயக்குகிறது. பஞ்சபூதத்தின் இயக்கம் உயிர் சக்தியாக மாற்றம் அடையும்பொழுது உடலின் வடிவத்திற்கு உருமாறுகிறது. இவற்றை விரிவாக கூற வேண்டுமாயின் பஞ்சபூதங்கள் ஐந்து விதமான பிராணசக்தியாக பிறப்பு எடுக்கிறது.இந்த...

Monday, December 2, 2013

இதுதான் தாம்பூலம்!

 “இதுதான் தாம்பூலம்”…வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம் அல்ல…தரமான தாம்பூலம் என்பது -ஒரு பாக்குஐந்து வெற்றிலைசிறிது கஸ்தூரிபச்சைக் கற்பூரம்சங்கச் சூரணம்இரண்டு கிராம்புசிறிது ஜாதிக்காய்மூன்று வால் மிளகுஇந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக் கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகு...

Friday, November 29, 2013

உறவு முறை பழமொழிகள்!

அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல் நாட்டார் தம்பி உடையான் படைக்கு அஞ்சான்அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனலாம்.மகள் ஆனாலும் சும்மா வரமாட்டாள் கணவன்; புல்லானாலும் புருஷன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் பிள்ளை பெறுவதற்கு முன்பே தின்றுபார் மருமகள் வருவதற்கு முன்பே கட்டிப் பார் பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும் மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?உள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒன்று.நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா!சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல;சீரகம் இட்டு ஆட்டாத கறியும் கறியல...

Thursday, November 28, 2013

கொங்கு மண்டல மலைகளும் கோட்டைகளும்!

 1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,பாலமலை, பெருமாள் மலை3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை,...

Tuesday, November 26, 2013

"தோரணம்" பற்றிய அறிய தகவல்.!

 தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.1. மங்கள தோரணம்.2. அமங்கள தோரணம்மங்கள தோரணம்:மாவிலை தோரணம், சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.அமங்கள தோரணம்:மரணவீடு...

Monday, November 25, 2013

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.2. நன்றாகத் தூங்குங்கள்நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.3. நடங்கள்! ஓடுங்கள்!தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம்...

Sunday, November 24, 2013

16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!

 குறிப்பு: இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.இதோ 16 வகையான செல்வங்கள் 1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு 6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி 11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள் 16 செல்வங்களைப் பெரும் வழிகள் 1. புகழ் :யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.2. வெற்றி  வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும்,...

 
back to top