.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label பொது அறிவு!. Show all posts
Showing posts with label பொது அறிவு!. Show all posts

Tuesday, January 14, 2014

இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக..? எச்சரிக்கை..!

நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா? நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது. பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல...

Friday, January 10, 2014

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா..?

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம். என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு. ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன. ஆனால், அதில் தப்பிப்...

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை..!

மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை: புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனையாக புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உயிர்கொல்லி வியாதியான புற்றுநோய்க்கு இலக்கானவர்களுக்கு மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிலும், மார்பக புற்று நோய் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், பீதியிலும், வலியிலும், வேதனையிலும் தான் கழிந்து வந்தது. பெரும்பாலான புற்று நோய் சார்ந்த மரணங்களுக்கு நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக...

தோள்பட்டை வாதத்திற்கு...

நன்றி நக்கீரன்... ...

ஊர் சுற்றலாம் வாங்க.. - சென்னை ..!

சென்னை தலைநகரம் : சென்னை பரப்பு : 174 ச.கி.மீ மக்கள் தொகை : 4,216,268 எழுத்தறிவு : 3,079,004 (80.14%) ஆண்கள் : 2,161,605 பெண்கள் : 2,094,663 மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 24,231 அமைவிடம்: தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கடற்கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா ; ஏனைய திசைகளில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன. வரலாறு : சென்னை நகரம் 1659 இல் நிர்மானம் செய்யப்பட்டது. பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 களில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது :...

Thursday, January 9, 2014

உங்களுடைய ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

உங்களுடைய  ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..? இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு...

இவ்வளவுதான் நம்ம..?

இவ்வளவுதான் நம்ம..?  1. நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது உங்கள் மூளை 25 வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும் திறன் பெற்றது, இது ஒரு பல்பை ஒளிரச் செய்யப் போதுமான அளவு மின்சாரம் ஆகும். 2. நாக்கின் ரேகை மனிதனுக்கு மனிதன் வேறுபடும். 3. ஒவ்வொரு நாளும் நமது உடம்பு 300 பில்லியன் செல்களை உற்பத்தி செய்கிறது. 4. மனித மூளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை உள்ளடக்கியது. 5. தைராய்டு குருத்தெலும்பு பொதுவாக ஆடம்ஸ் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது. 6. குழந்தைகள் வசந்த காலத்தில் வேகமாக வளர்கின்றன. 7. சராசரியாக மனித இதயம் அதன் வாழ்நாளில் 3,000 மில்லியன் முறை துடிக்கிறது. 8. உங்கள் உடலில் உள்ள எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு எலும்புகள் உங்கள்...

சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்..!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் “யங் சயின்டிஸ்ட் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் சோலார் பைக்கை சோதனை செய்து ஆராய்சிக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராஜேஷின் எதிர்கால லட்சியம்...

Wednesday, January 8, 2014

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்..?

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்?  புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு...

தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது? - குழந்தையின் ஆரோக்கியம்

தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது? குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும் தடுப்பூசி நோய்த் தடுப்பு...

Tuesday, January 7, 2014

ஆக்ஸிஜன் பயன்பாடு…

பொது அறிவு: ஆக்ஸிஜன் பயன்பாடு… ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். காரணம், ஆக்ஸிஜன் இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது. நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்ஸிஜனில், சுமார் 20 சதவீதம் ஆக்ஸிஜனை நமது மூளையே பயன்படுத்துகிறது. சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப் படுவான். அடுத்த சில நொடிகளில் மூளையின் செல்கள் இறந்து, மனிதன் மரண நிலைக்குத் தள்ளப்படுகிறான். இருப்பினும் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மனித மூளைக்கு மிகக் குறைந்த ஆக்ஸிஜன் போதுமானது. காரணம், மிகக் குறைந்த வெப்பநிலையில் மூளையானது மிகக் குறைந்த ஆக்ஸிஜனையே உபயோகிக்கிறது. எனவே,...

Monday, December 23, 2013

கருத்த பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகள்!

கருப்பான சருமம் என்பது நம் ஊ ரைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப் படும் முன்னுரிமை தான். கருப்பு என்பது வெறுக் கத்தக்க நிறமி ல்லை. இந்தியர் களின் உண்மை நிறமே கருப் புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்ற லாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத் தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்பு கள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.  பப்பாளி, ஆரஞ்சு பழ பேஷியல்  முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடை த்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை...

காணாமல் போன விளையாட்டுகள்!

அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே! உப்புக்கோடு உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில்...

Sunday, December 22, 2013

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!

சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார். அந்த பணத்தை வைத்து சர்க்கஸை தொடங்கி நடத்தி வருகிறார். அப்படி அவர் கொள்ளை சம்பவங்களை நடத்தும்போது ஒவ்வொரு முறையும் இந்தி மொழியில் ஏதோ எழுதி வைத்து வந்துவிடுகிறார். இந்தி மொழியை வைத்து அவர் இந்தியாவை...

நிலா

நிலா 1.சூரியமண்டலத்தில் ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். 2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் ஜீலை 21.1969.  (முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸராங். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இறங்குவதற்கு உதவிய ஏனியின் பெயர் "ஈகிள்." முதன் முதல் இவர் இடது காலை நிலாவில் எடுத்து வைத்தார். இரண்டாவாதாக இறங்கினவரின் பெயர் ''எட்வின் ஆல்ட்ரின்.'' நீல் ஆம்ஸ்ராங் இறங்கும்போது எட்வின் ஆல்ட்ரினும், கொலின்ஸ்சும் கூட இருந்தவர்கள்.) 3.நிலவிலிருந்து எடுத்த பாறையின் வயது 425 மில்லியன் ஆண்டுகள். 4.நிலவை முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ. 5.நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். 6.நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர். 7.நிலவின் விட்டம் 3475 கி.மீ. 8.நிலவின் சராசரி அடர்த்தி 3.342.  9.நிலவு, பூமியிலிருந்து 384,403 கி.மீ தூரத்தில் உள்ளது. 10.நிலவு, பூமியைச் சுற்றும்...

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்! பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம். வெங்காயம்  வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும். பூண்டு  பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம். உருளைக்கிழங்கு  உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க...

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா? ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல. இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். தேன்: தொண்டை வலி  தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண்...

பசுக்கள் கோமாரி நோயால்

இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில். சுலபமான மருந்து ஒன்று உள்ளது... ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4 பல்லு, நாட்டு சர்க்கரை 100 கிராம், தேங்காய் பூ 1 மூடி அத்தனையையும் அரைத்து சட்டினியாக்கி ஒரு வேளை க்கு ஊட்டிவிடவும். இப்படி 3 நாள் 3 வேளை செய்யின் பசு தெளியும். மேலும் ஒரு லிட்டர் நல்லண்ணையில் பூண்டு, மஞ்சள், வேப்பிலை,துளசி,மருதாணி, குப்பைமேனி இவைகளை சேர் ததுக் காய்ச்சி ஆரவைத்து நான்கு கால்களிலும் தடவவும். நன்றி...

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி  பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது . உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல் பாஸ்வேர்டு தயாராகிவிடும். இந்த எழுத்து வரிசையை யாராலும் அத்தனை எளிதில் ஊகித்துவிடவும் முடியாது. அதன்...

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள்.

இண்டெர்நெட்டில் அந்த கால டி.வி நிகழ்ச்சிகள். கீழே உள்ள‌ இணையதளம் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். அப்படியே பிளேஷ்பேக் நினைவுகளில் மூழ்க வைத்துவிடும். இந்த தளம் 1980 களுக்கு பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க வைக்கிறது. அதுவும் எப்படி அந்த காலத்தில் தொலைக்காட்சி பார்த்த அனுபவத்தை பெரும் வகையில். ‘ இப்போது பிளாட் டிவிகளையும் பிளஸ்மா டிவிகளையும் கொஞ்சம் மறந்து , டயனோரா, சாலிடேர் காலத்துக்கு செல்லுங்கள் பார்க்கலாம். ( இளம் தலைமுறையினர் கூகுலில் தேடிப்பார்க்கவும் ,அல்லது தில்லுமுல்லு கால படங்களில் டிவியை பார்க்கவும்). ஒரு பெரிய மேஜையை அடைத்துக்கொள்ளும் அளவுக்கு அமைந்திருந்த அந்த நாள் தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இணைய திறையில் நிகழ்ச்சிகள் இந்த தளத்தில் ஒளிபரப்பாகின்றன. முகப்பு பக்கத்தில் இருக்கும் அந்த கால டிவியில் நிகழ்ச்சிகள்...
 
back to top