.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மாணவர் சாதனை!. Show all posts
Showing posts with label மாணவர் சாதனை!. Show all posts

Friday, January 17, 2014

செல்போனில் புயல் அறிகுறி:வி.ஐ.டி.மாணவர்களின் லேட்டஸ்ட் சாதனை!

புயல் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பதிலாக புயல் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உடனடியாக அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விவேக் வித்யாசாகரன் மற்றும் சந்தீப் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டனர்.வி.ஐ.டி. இயந்திரவியல் மற்றும் கட்டிட அறிவியல் பள்ளி பேராசிரியர் சத்யஜித் கோஷ் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள் செல்போன் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 929 மில்லியனிலிருந்து...

Saturday, November 30, 2013

முதன் முறையாக குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற பெண்!

 அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பிரோஸ் பாத்திமா என்ற பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதன் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது, இதனை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்துகிறார்.இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(வயது 22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார்.இந்த சீசனில் ரூ.1 கோடி வென்ற முதல் பெண் பாத்திமா தான்.பாத்திமாவின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், இதனால் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.ஆனால் தனது தங்கையின் கல்லூரி படிப்பு பாதிக்காமல்...

Friday, November 29, 2013

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். சர்வதேச நாடுகள்,...

Thursday, November 28, 2013

ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய நானோ 3 டி கேமிரா!

 அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள் நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்றது.இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது என்பது விசேஷ தகவல்.டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்பாதை அவ்வப்போது ஒளிபரப்புகிறார்ர்கள். அது ஒவ்வொரு முறையும் மிகவும் வியப்பாகவே இருகிறது. ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில்...

Tuesday, November 26, 2013

மாணவர்களும் மன ஆற்றலும்!

இயற்கை சமுதாயம், மனம் என்ற முக்கோணத்துக்குள் வாழ்ந்து வரும் மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.பொதுவாகவே குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) சிறுவயது முதலே ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தில் இலக்குகளை நிர்ணயிக்க, அவற்றை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர்.‘Critical Mass Theory’ யின்படி கைதவறி ஓடை நீரில் விழுந்த கிழங்கை, எடுத்துத் தின்ற குரங்கு பெற்ற சுவை மண்ணில்லாமல் இருந்ததால், மகிழ்ச்சி தர, அந்த எண்ணம் பல நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த குரங்கு கட்கும் உள்ளுணர்வாய் சென்றடைந்ததை நாம் அறிவோம். அதுபோல் பெரும்பாலும் பெற்றோர் விருப்பப்படி எதிர்கால படிப்பைத் தேர்வு செய்கிறோம்.விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்தை விரும்பு என்பதற்கேற்ப, தேர்வு செய்த பாடத்திட்டத்தில் ஆர்வம் கொண்டு,...

Monday, November 25, 2013

உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது - குட்டிக்கதைகள்!

மகிழ்ச்சி என்பது விளைவு என நினைப்பதால்தான், நாம் திரும்பிப் பார்க்கும்போது அதிக நாட்கள் இன்பமாக இருந் ததுபோலத் தோன்றுவதில்லை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நிகழ்விலும் அடங்கியிருக்கிறது!அதிக மதிப்பெண்ணுக்காக இல்லாமல், படிப்பதே மகிழ்ச்சி தருவதாக ஆக வேண்டும்; சம்பளம் மட்டுமின்றி, பணிபுரிவதே ஆனந்தம் தருவதாக அமைய வேண்டும்! இரவு என்பது இல்லையெனில், விடியலில் பறவைகளின் இசை காதுகளில் விழ வாய்ப்பில்லை. நுணுக்கமான பணியைச் செய்து முடித்து, காலாற நடந்து, குளிர்ந்த காற்றைச் சுவாசித்து மகிழ... அதில் கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.இப்படிச் சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் அடங்கியிருக்கும் மகிழ்ச்சியைத் தவறவிடுபவர்கள், பெரிய இன்பம் வந்தாலும் அதை நுகரமுடியாமல் நுரைதள்ளிவிடுவார்கள். பசிக்காமல் சாப்பிட்டு, உழைக்காமல் ஓய்வெ டுத்து, கீழே விழ பயந்து, முயற்சி எடுக்க மறந்து, பாதுகாப்பான வாழ்க்கையை...

Saturday, November 23, 2013

ஐநாவும் என்னை அழைத்தது... சுவர்ணலட்சுமி சாதனை!

 சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை...

எதிர் நீச்சல் எளிது!

நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் ‘தலைவாசல்’ விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, உலகமே கவனிக்கும் இடத்தில் இருக்கும் நீச்சல் சாம்பியன்! செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிற ஜெயவீணாவுக்கு ஒவ்வொரு விடியலிலும் வெற்றி! 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்பது இவரது லேட்டஸ்ட் அடையாளம்! ‘‘எங்கண்ணா ஜெயவந்த், ஸ்விம்மிங் ப்ராக்டீஸ் பண்ணப் போகும்போது நானும் வேடிக்கைப் பார்க்கப் போவேனாம். எனக்கு ரெண்டரை வயசிருக்கும்... ‘அண்ணாகூட...

Thursday, November 21, 2013

விவசாயத்தின் மீதான அக்கறை - பள்ளி மாணவனின் கண்டுபிடிப்பு..!

காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.வயல்களில் கைகளை கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது. பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும். இரைச்சல், அதிகமாக இருக்கும்.இதற்கு மாற்றாக சூரிய ஒளி பூச்சி கொல்லி மருந்து தெளிப்பானை காரைக்கால் கீழக்காசாகுடி ஆத்மாலயா பள்ளி 8ம் வகுப்பு மாணவன் முகேஷ் நாராயணன் (வயது 13) வடிமைத்துள்ளார். முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து செயல்விளக்கம் காண்பித்தார்.இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி,...

Sunday, November 17, 2013

தொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்!

கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார் கிராமத்து பொறியாளர் ஹரிராம்சந்தர். இவர் வடிவமைத்துள்ள இந்த டச்லெஸ் சுவிட்ச், இன்பிரா ரெட் (அகச்சிவப்பு கதிர்) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இளம் பொறியாளர் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர் ஹரிராம்சந்தர். 23 வயதாகும் இந்த பி.டெக். (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பட்டதாரிக்கு பள்ளியில் படிக்கின்ற காலம்தொட்டே விஞ்ஞானத்தின் மீது ஓர் ஈர்ப்பு. இத்தனைக்கும் அவரது பெற்றோர் ஒன்றும் படித்தவர்கள் கிடையாது. அவரது மறைந்த தந்தை முருகன், சாதாரண மில் தொழிலாளிதான். தாயார் முத்துலட்சுமி வீட்டை கவனித்து...

Saturday, November 16, 2013

நெரிசலில் சிக்காது ஆம்புலன்ஸ் - மாணவர் கண்டுபிடிப்பு!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் எளிதாகச் செல்ல தொழில்நுட்பம் ஒன்று பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளதுகண்டுபிடிப்பின் பெயர் : Emergency Traffic Clearing Remote Control kitகண்டுபிடிப்பாளர்களின் பெயர் : லோகேஸ்வரன், விஷ்ணுதாஸ், விகாஷ், ஜவகர்பள்ளியின் பெயர் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரமடைகண்டுபிடிப்பின் பயன் : ஆம்புலன்ஸ் டிரைவர் தன் கையில் உள்ள ரிமோட்டை பயன்படுத்தி போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிக்னலை மாற்றமுடியும்உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை ஏற்றிச்  செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையை விரைவாகச் சென்று அடைந்திட, எமர்ஜென்ஸி டிராஃபிக் கிளியரிங் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் (Emergency Traffic clearing Remote control Kit) என்கிற கருவியை உருவாக்கியுள்ளனர் காரமடை, ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்...

Thursday, November 14, 2013

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய...

Sunday, November 10, 2013

“வைக்கோல் குக்கர்” எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து சாதனை!

 வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.”எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். ‘அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்” என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.”சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல்,...

Monday, November 4, 2013

'ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனைபூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது. இத்தகைய...

Saturday, November 2, 2013

நாசாவிற்குச் செல்லும் தமிழக கிராமத்துமாணவர்!

மாறிவரும் பருவநிலை குறித்து இளம் விஞ்ஞானிகளின் கருத்துகளைக் கேட்பதற்கான கருத்தரங்கம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தமிழ்நாட்டின் கம்பம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சலீம்கான்.அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சி செய்துவரும் மாணவரான இவர், உயர்ந்து வரும் புவியின் வெப்பத்தால், மாறிவரும் பருவநிலை மாறுபாடு குறித்தும், இதனால் தமிழகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.கடலூர் மாவட்டத்தில், வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான கடற்கரைப் பகுதியில் இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். 2100 ஆம் ஆண்டிற்குள் 50 செ.மீ அளவிற்கு கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் வெள்ளாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையேயான பகுதியில் உள்ள கிராமங்கள் கடலுக்குள் மூழ்க...

Saturday, October 26, 2013

களைப்பில்லாமல் களையெடுக்கலாம்!

சூரிய ஒளியில் இயங்கக் கூடிய களை எடுக்கும் இயந்திரம் ஒன்று  வடிவமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிப்பின் பெயர்: சோலார் ட்ரில்லர்கண்டுபிடிப்பாளரின் பெயர்: எல்.முகேஷ் நாராயணன்படிக்கும் பள்ளி: ஆத்மாலயா பள்ளி, கீழகாசாக்குடி,காரைக்கால்கண்டுபிடிப்பின் பயன்: தற்போது பெரும்பாலான விவசாயிகள் களை எடுப்பதற்கு கோனோ வீடர் என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். வயலில் தள்ளிச் செல்லும் அமைப்புள்ள  இந்தக் கருவி, சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப களைகளை நீக்கும். ஆனால் கோனோவீடரை அதிக நேரம் கையாளும்போது விவசாயிகள் களைப்படைகின்றனர். இதற்கு முற்றிலும் மாற்றாக இந்த சோலார் ட்ரில்லர் கருவி செயல்படுகிறது.இதில் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த இயந்திரத்தை எளிதாக விவசாயிகள் கையாள முடியும். களைகளை துல்லியமாகவும் அகற்ற முடியும். மேலும் இந்த ட்ரில்லரை  சிறிய அளவிலான விவசாய நிலங்களை உழுவதற்கு...

Saturday, October 12, 2013

இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது - இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதற்கு!!

பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களே பங்கேற்க முடியும். இந்த விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ....

Thursday, October 10, 2013

‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!

தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.தற்போது பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை...

Monday, September 30, 2013

தவிட்டு எண்ணெயிலும் வாகனங்கள் ஓட்டலாம்...

கண்டுபிடிப்பின் பெயர் : தவிட்டு எண்ணெய் எரிபொருள்கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : மகேஷ் ராஜா, ப்ரவீன், வெற்றிவேல், விக்னேஷ்வரன்கல்லூரி : அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருக்குவளைகண்டுபிடிப்பின் பயன் : எரிபொருள் சிக்கனப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறதுஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தவிட்டு எண்ணெயை கலப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் டீசலுடன் கலந்து மாற்று எரிபொருளைக் கண்டறிந்துள்ளனர் திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள்.தற்சமயம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானது தான் தவிட்டு எண்ணெய். எதற்கும் பயன்படாத தவிட்டு எண்ணெயை டீசலுடன் கலப்புத் தொழில்நுட்பத்தில் சேர்த்து வாகனங்களை இயக்க முடிவு செய்தோம்.பல அளவீடுகளில் முயன்று இறுதியில்,  80 சதவிகித தவிட்டு...

உளவு உலோகப் பட்டாம் பூச்சி..!

எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் உள்ள வான்பயண மின்னணுவியல் (Avionics) ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ‘தக்ஷா‘ என்ற குழுவினர்  ஆட்கள் இல்லாமலேயே பறக்கும் குட்டி விமானம் ஒன்றை  உருவாக்கியுள்ளனர்.பெயரிடப்படாத இந்த ஆளில்லாத குட்டி விமானம், நிலஅளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தை எளிதாக எந்தப் பகுதிக்கும் தூக்கிச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பு. விமானத்தின் அடிப்பாகத்தில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளன.ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானம், வானத்தில் பறந்தபடி எடுக்கும்  படங்கள், வீடியோக்களை லேப் டாப்பில் நாம் நேரடியாகப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இது, ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குப் பறந்து...
 
back to top