
நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் ஆஷா போன் தொடர்களை விரிவுபடுத்தி ஆஷா 500, ஆஷா 502 மற்றும் ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. இந்திய சந்தையில் நோக்கியா ஆஷா 500 ரூ.4,499 விலையிலும், நோக்கியா ஆஷா 502 ரூ.5.969 விலையிலும் இப்போது கிடைக்கிறது.இறுதியாக நிறுவனம் நோக்கியா ஆஷா 503 அறிமுகப்படுதியுள்ளது. முன்னதாக நோக்கியா ஆஷா 503 ரூ.6,799 விலையில் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இப்போது நோக்கியா வலைத்தளத்தில் இருந்து நோக்கியா ஆஷா 503 ரூ.6.683 விலையில் ஆர்டர் செய்யலாம். இந்த போன் கருப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் வகைகளில் கிடைக்கும்.நோக்கியா ஆஷா 503, சாதனத்தில் ஸ்வைப் பயனர் இடைமுகம் மற்றும் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா...