.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label வினோத செய்திகள். Show all posts
Showing posts with label வினோத செய்திகள். Show all posts

Monday, January 20, 2014

பாம்பு பாதி-பெண்ணில் பாதி' கலந்து பிறந்த சிறுமி...!!!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும், தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்’ அல்லது...

Sunday, January 5, 2014

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.பெருமளவில் வளர்ந்து வரும்...

மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்: ஆய்வில் தகவல்

மது குடிக்கும் மக்கள் நீண்டகாலம் வாழலாம்: ஆய்வில் தகவல்மதுவில் இருந்து முற்றிலும் விலகியிருக்கும் மக்களை விட மதுபானத்தை வழக்கமாக அருந்தும் மக்கள் நீண்டகாலம் வாழ்வார்கள் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும், மது அருந்தாத மக்களின் இறப்பு விகிதம் அதிகமாக கொண்டிருப்பவர்களாக தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் மூன்று பானங்கள் என வரையறுக்கப்பட்ட மிதமான குடிபழக்கம் உள்ள மக்கள் மிகக்குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டிருப்பார்கள் என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியலாளர், சார்லஸ் ஹோலஹன், தலைமையிலான அணி ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்று 'தி இன்டிபென்டன்ட்' தகவல் அளித்துள்ளது.ஆய்வில் மது அருந்துபவர்கள்...

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு...!

சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு மிகப் பெரிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன.அதாவது பூமியில் இருந்து நாம் காணும் நிலவை விட பலமடங்கு பெரியதாக இருந்தது. சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய நட்சத்திரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.  இதனையடுத்து சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துளள்ளனர்.சூரியனை மையமாக...

Wednesday, December 25, 2013

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் எரிமலைகள்...?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் எரிமலைகளுக்கு இருக்கிறது என்னும் ஒரு ஆச்சரிய தகவலை அண்மையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் கணித்ததை விட பூமி குறைந்த அளவே வெப்பமடைந்திருந்ததன் காரணத்தை கண்டறிய முயன்ற விஞ்ஞானிகளுக்கு எரிமலைகள் பூமியை வெப்பமடைதலிலிருந்து காத்திருப்பது தெரியவந்தது.பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிப்பது வெப்ப வாயுக்கள் எனப்படும் Green house gases தான். இந்த வாயுக்கள் சூரிய வெப்பத்தை உள்வாங்கி பூமியின் வளிமண்டலத்தின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிக்கின்றன .இந்நிலையில், வெப்ப வாயுக்களால் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாறுதலை கட்டுப்படுத்தும்...

Tuesday, December 24, 2013

அமுக்குவான் பேய் - உண்மையா?....

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான...

நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!

21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்! அதிலும் தென்னாட்டிலிருந்தே மிகச்சக்தி வாய்ந்த ஆட்சி அமையும்!- நாஸ்ட்ரடாமஸ்(Nostradamus)இவருடைய 500 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற தீர்க்க தரிசனம் நிறைவேறுமா?!இவரைப் பற்றிச் சில தகவல்கள்.நாஸ்ட்ரடாமஸ் ஒரு புரியாத புதிர் ( Nostradamus )..!இந்தியர்களில் சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும், சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர்.அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்;...

Wednesday, December 18, 2013

மரங்களை வெட்டுங்கள்......??

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக...

Tuesday, December 17, 2013

ஆஸ்கார் பூனை...

மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர்,...

Sunday, December 8, 2013

பறவையா? பூவா? அதிசயம்!

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு வகை பூ, கிளியின் உருவத்தை ஒத்தது. தூர இருந்து பார்த்தால் கிளியென்று ஏமாந்து விடுவர்.இந்த வகை பூக்கள் தாய்லாந்தில் மட்டுமே காணப்படுகின்றன.இந்த கிளிப் பூ மரத்தை தாய்லாந்துக்கு வெளியில் எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் இந்த அரிதான பூ இனத்தை தாய்லாந்து நாட்டுக்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியு...

Monday, December 2, 2013

‘கிச்சன் கெபினட்’ பிறந்த விதம்!

அரசாங்கத் தலைவர்களின் அதிகார பூர்வமற்ற ஆலோசகர்கள் வட்டம் ‘கிச்சன் கெபினட்’ என்று அழைக்கப்படுகிறது.இந்த வார்த்தை 1832 இல் உருவானது. அப்போது அமெரிக்க  ஜனாதிபதியாக ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் இருந்தார்.அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார்.அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக  நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள்.அதிலிருந்து அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு வட்டத்தை ‘கிச்சன் கெபினட்’ என்று பத்திரிகையாளர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள்.பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற அரசியல் ஆலோசகர்களைக் குறிக்கும் வார்த்தையாக இது மாறிய...

“உலகின் அழகற்ற நாய்” உயிரிழந்தது!

 அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட் (8). சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பி னமான எட்வுட், 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றது.அதன் பின் அதன் புகழ், அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அந்த நாய்க்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறி னர்.இந்த உலக பேம்ஸான் எல்வுட் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லைஎப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எல்வுட், சற்று மூடிய கண்களுடனும், தலையில் விசித்திரமான வெள்ளை முடிக் கற்றைகளுடன் வலம் வந்தது....

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.வேற்று கிரக வாசிகள்...

பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையினம்..

 ஆஸ்திரேலியாவின் “மாலிபவுல்’ என்னும் பறவை ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது.ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும்.குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும்.அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை.பொறுப்பில்லாத மம்மி. இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதா...

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது.-இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்.-நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.-ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால்,...

Sunday, December 1, 2013

சைகோடிரியா எலாட்டாக்கு முத்தம் கொடுக்க வாரீகளா!

 பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷய...

அடிவயிற்றில் இருதயத்துடன் உயிர் வாழும் இளைஞர்!

 பிறக்கும்போதே அடிவயிற்றில் இருதயத்துடன் பிறந்து 24 வயது வரை உயிர்வாழ்ந்து கொண்டியிருக்கும் இளைஞர் அதிசயமாக கருதப்படுகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் இருதயத்தை பொருத்த சீன டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சீனாவின் கினாம் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூஜிலியாங் (வயது 24). இவர் முடிதிருத்தல் தொழில் செய்து வருகிறார். பிறக்கும்போதே இவருக்கு அடிவயிற்றில் இருதய துடிப்பின் சத்தம் கேட்டது. ஆனால் இவரது பெற்றோர்கள் இதை சாதாரணாகவே எடுத்துக்கொண்டனர். நாளடைவில் ஹூஜிலியாங்கின் இருதயம் அடிவயிற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவர், பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. கடினமாக வேலை செய்தால் அல்லது ஓடினால்...

Saturday, November 30, 2013

வேடிக்கையான வேலை வேண்டாம் கடிதங்கள்.....

Resign என்று கூகிள் இல் தேடிய போது கிடைத்த சில வேடிக்கையான, விதியாசமான வேலை வேண்டாம் கடிதங்கள், சில உங்களின் பார்வைக்கு.....ஒரு பிளாக்கர்-இன் resignation letter ஒரு விமானியின் முயற்சி,web design இல் வேலை செய்பவரின் முயற்சிகேக்கில் resignation letterஅமெரிக்க ஜனாதிபதின் resignation letter yahoo resignation letter generator சில வேடிக்கையான resignation letter இதை எல்லாம் விட நமவர்கள் அனுப்பும் சில கடிதங்கள்,Fromநான் தான்உன் துறை தான்உன் கம்பெனி தான்Toநீ தான் உன் துறை தான் ஐயா,நான் இனிமேல பணிக்கு வரமாட்டேன், உன்னால் முடிந்ததை செய்து கொள்இப்படிக்குநான் தான்...

நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது,இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.-ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள்,கடைசியாக கண்கள் விழிப்படைகின்...

Tuesday, November 26, 2013

எலுமிச்சை -பெயர் காரணம்!

 எலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்கள்.எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல்தான், இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்பது மருவி,என்ற பெயர் வந்ததெனக் கூறுவ...
 
back to top