.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, August 23, 2013

நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!

நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!! "டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?" "ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."-----------------------------------------------------------------------------------------------------------"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..." "ஏன்...?" "அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"-----------------------------------------------------------------------------------------------------------"மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப் பின்னால் நிறைய பேர் ஓடி வருகிறார்களே... யார் அவர்கள்?" "அது மன்னரின் புறமுதுகுக்குப் பாதுகாப்பு தரும், பிறர் முதுகிட்ட படையாம்!"-----------------------------------------------------------------------------------------------------------"எம்பிளாய்மெண்ட்...

ஹைக்கூ கவிதைகள்...

ஹைக்கூ கவிதைகள்... வரதட்சணை:அம்மி மிதித்தவளைதிரும்பி மிதித்தார்கள் கிரைண்டர் வராததால் தொ(ல்)லைக்காட்சி பெட்டி!:தொலைக்காட்சி பார்க்கும் நேரம்விருந்தினர் வருகை - விசாரிக்க வராமலா போகும் விளம்பரம் சுமை:அறிவின் துளிர்சுமக்க முடியவில்லை புத்தகச் சுமை வாழ்க்கைப் பாடம்:கிளறினால் கிடைக்கும் வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் கோழி மதக்கலவரம்:கருவறையில் பத்திரமாய்கடவுள்கள் கல்லறையாய்தெருவெங்கும் அப்பாவிகள்!! நேரம்:நேற்று அழிந்த எழுத்து நாளை கிடைக்காத இனிப்பு இன்றே சுவைக்கும் கனிஎடைக்குறைவு: ரேசன் கடைக்காரருக்குகுழந்தை பிறந்ததுஎடை குறைவாய்! புகை அது பகை:அலறியது காற்றுஒளிய இடமில்லை வாகனப்ப...

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!  வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.   பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும்,...

விவேகானந்தரின் பொன் மொழிகள்!!!

விவேகானந்தரின் பொன் மொழிகள்!!! "நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!" "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!""நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.""பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!""கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.""உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.""அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.""மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.""சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.""நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக...
Page 1 of 77712345Next
 
back to top