.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, September 12, 2013

தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!

தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ...

ரஜினி பட தலைப்பில் கார்த்தி!! ரஞ்சித் இயக்குகிறார்!

 சகுனி, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தொடர் தோல்விகளுக்கு பிறகு கார்த்தி ரொம்ப நிதானமாகவும், படத்தின் கதையை நன்றாக கேட்டும் அடுத்த படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் தற்போது வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ படத்திலும், ராஜேஷின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு அடுத்தபடியாக ஒரு படத்தில் கார்த்தி நடிக்கிறார். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் தான் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார். வழக்கம் போல் கார்த்தி, சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் அறிமுகமாகிறார். ரஜினி நடித்த...

பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் சீக்கிரம் வரும்!

"பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,'' என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில், நேற்று காலை 11 மணியளவில், இந்த பேரணியை பாரதியார் பல்கலை பதிவாளர் ராதாகிருஷணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக, வ.உ.சி., மைதானம் வந்தடைந்தது. மாணவ, மாணவியர் புரோட்டா உணவால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட...

அக்., 21க்கு பின்னர் செவ்வாய்க்கு செயற்கை கோள் : இஸ்ரோ

ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக தயாரி்க்கப்பட்டுள்ள‌ ‌செயற்கை கோள் விண்ணில் ஏவ தாயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோவின் செவ்வாய் திட்ட இயக்குனர் அருணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: முதல் செயற்கைகோள்: இந்தியாவில் இருந்து ஏற்கனவே பூமியின் சுற்றுவட்டப்பாதை மற்றும் சநதிரன் போன்றவற்றிற்கு செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நீண்ட தொலைவில் உள்ள வேறு கிரகம் ஒன்றிற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் முதல் செயற்கை கோள் இதுவாகும். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் உத‌வியுடன் இதனை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 340 கிலோ ‌எடை கொண்ட செயற்கை கோளில் சுமார் 5 அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கருவிகளின் மொத்த எடை1 5 கிலோ வாகும். இவை செவ்வாய் கிரகத்தி்ல் உள்ள மீத்தேன், கனிம வளம், கிரகத்தின் அமைப்பு , போன்றவை குறித்த ஆராய்ச்சியில்...
Page 1 of 77712345Next
 
back to top