.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, October 10, 2013

விஞ்ஞானி பென்சிகர் ராஜன் தகவல் மங்கல்யான் விண்கலம் வரும் 29ல் விண்ணில் ஏவப்படும்!

குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக விண்வெளி வாரவிழா நடைபெற்றது.  விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி பென்சிகர் ராஜன் பேசியதாவது, மங்கல்யான் விண்கலம் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இது அதன் சுற்றுவட்டப்பாதையை சென்றடைய சுமார் 300 நாட்கள் ஆகும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதா? நீர்ப்பரப்பு இருக்கிறதா என  ஆய்வு செய்யும். மீத்தேன் வாயு இருந்தால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்புண்டு. இந்தியா அனுப்பியுள்ள ஐஆர்எஸ் என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் காடு, மீன், கனிமவளங்கள் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.  70 நாடுகள் இணைந்து ஐநா சபை ஒப்புதலுடன்...

‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!

தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.தற்போது பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை...

2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!

கொஞ்சுண்டு சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதிலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! மேலும் அபின் போன்ற போதை மருந்து சாப்பிடுவர் போன்று அடிமையாக மாறி விடுவர்கள் என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவல் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லியிருந்தனர்ர். அதாவது இயற்கையாவே நம் மூளையினுள் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது என்கெப்லின் திரவம் இரு மடங்காக சுரக்கின்றது. எனவே மூளைக்கு செல்லும் உணர்வு நரம்புகளை பாதித்து செயலிழக்க செய்து...

தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!

தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன. அத்துடன் உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும்...
Page 1 of 77712345Next

 
back to top