
கடந்த பதிவில் ஏழாம் நூற்றாண்டு வரை உள்ள உலக வரைபடங்களைபார்த்தோம் இந்த பதிவில் எட்டாம் நூற்றாண்டு வரைபடத்திலிருந்து பார்ப்போம் அதற்கு முன் நண்பர்கள் சிலர் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு விடையளித்து விட்டு தொடர்கிறேன் ஏனெனில் அந்த கேள்வி உங்களுக்கும் தோன்றியிருக்கும். உலகின் முதல் வரைபடம்னு குறிப்பிட்டிருக்கும் வரைபடத்தில் உலகம் முழுவதும் இல்லையே? என்பதே அந்த கேள்வி.விடை: மனித நாகரிகம் முதன் முதலாக தோண்டியதாக கருதப்படும் மெசபடோமியாவை (பாபிலோனியர்கள்) சுற்றி மட்டுமே அந்த வரைபடம் இருந்திருக்கும் ஏனெனில் மனிதன் உலகம் என்று நினைத்தது அந்த பகுதியை...