.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 16, 2013

பிடிஎப் கோப்புகளை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய எளிய வழி!

முதலில் உருவாக்கப்பட்ட போது அதனை யாரும் எளிதில் எடிட் செய்ய முடியாது. மேலும் இதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான் செயல் இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை அது தலைகீழாக மாறிவிட்டது, பிடிஎப் கோப்புகளை எடிட் செய்வதற்கு
ம், உருவாக்குவதற்கும் , கன்வெர்ட் செய்வதற்கும் மென்பொருள் சந்தையில் என்னற்ற மென்பொருளும் இணையத்தில் இலவச வலைமனைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் Cometdocs. இதில் இரண்டுவிதமான சேவைகளும் உள்ளன. டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் கன்வெர்சன் ஆகியவை.

மென்பொருளை தரவிறக்க http://www.cometdocs.com/desktopApp

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் பிடிஎப் கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Convert To என்பதை தெரிவு செய்து எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.


 சிலமணி நேரங்களில் குறிப்பிட்ட கோப்பானது கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும். பின் அந்த கோப்பினை வழக்கம் போல்  பயன்படுத்திக்கொள்ள முடியும்.


பிடிஎப் கோப்பினை உருவாக்க குறிப்பிட்ட கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது கிளிக் செய்து தோன்றும் பாப்-அப் விண்டோவில் Create PDF என்பதை கிளிக் செய்யவும். சிறிது நேரத்தில் குறிப்பிட்ட கோப்பானது பிடிஎப் கோப்பாக கன்வெர்ட் செய்யப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு செய்தி வரும்.


பின் அந்த பிடிஎப் கோப்பினை வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இதே நிறுவனம் ஆன்லைனிலும் இந்த வசதியை வழங்குகிறது.

தளத்திற்கான http://www.cometdocs.com/

குறிப்பிட்ட சுட்டியினை கிளிக் செய்யவும். ஒப்பன் ஆகும் தளத்தில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் வேண்டிய பைலை தெரிவு செய்து பின் கன்வெர்ட் செய்து கொள்ளவும். 2ஜிபி அளவு வரை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

நெரிசலில் சிக்காது ஆம்புலன்ஸ் - மாணவர் கண்டுபிடிப்பு!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் எளிதாகச் செல்ல தொழில்நுட்பம் ஒன்று பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது


கண்டுபிடிப்பின் பெயர் : Emergency Traffic Clearing Remote Control kit

கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : லோகேஸ்வரன், விஷ்ணுதாஸ், விகாஷ், ஜவகர்

பள்ளியின் பெயர் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரமடை

கண்டுபிடிப்பின் பயன் : ஆம்புலன்ஸ் டிரைவர் தன் கையில் உள்ள ரிமோட்டை பயன்படுத்தி போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிக்னலை மாற்றமுடியும்



உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை ஏற்றிச்  செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையை விரைவாகச் சென்று அடைந்திட, எமர்ஜென்ஸி டிராஃபிக் கிளியரிங் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் (Emergency Traffic clearing Remote control Kit) என்கிற கருவியை உருவாக்கியுள்ளனர் காரமடை, ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.  இந்தக் கருவி  RF waves என்னும் பண்பலை கொண்டு இயங்குகிறது.

சாலையில் உள்ள ஆட்டோமெட்டிக் சிக்னல்களில் ஒரு RF Trasnmitter பொருத்தி விடவேண்டும். அந்த RF Transmitter  ரிசீவரிடமிருந்து வரும் கட்டளைகளை ஏற்று செயல்படும் வகையில் கம்ப்யூட்டர் உதவியுடன் சிக்னல் கருவியின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.


ஆம்புலன்ஸில் உள்ள ரிமோட் கருவியில் ஸ்விட்சுகளும் இருக்கும். ஆம்புலன்ஸை ஓட்டி வரும் டிரைவர், 500 மீட்டர் தொலைவில் வரும்போதே ரிமோட்டை அழுத்தினால் போதும். அதிலுள்ள RF Transmitter  மூலமாக கட்டளைகள் அனுப்பப்படும். அப்போது  சிக்னலில் பொருத்தியுள்ள RF waves  பெறப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் பாதையில் கீரின் சிக்னலாகவும் மற்ற பாதையில் உள்ள  சிக்னல்கள் ரெட் சிக்னலாகவும் ஒளிர ஆரம்பித்து விடும்" என்கிறார், மாணவர் லோகேஸ்வரன்.


சிக்னல் விளக்கிற்கு 500 மீட்டர் தொலைவிற்கு முன்பே டிரைவர் இதை இயக்க முடியும். சிக்னலின் முன் நின்றிருக்கும் மற்ற வாகனங்கள் சிக்னலை உணர்ந்துகொண்டு இயங்கிட போதிய அவகாசம் கிடைக்கும்" என்கிறார்கள் இந்த மாணவர்கள்.


மத்திய அரசின் தொழில்நுட்ப விருதான,  ‘INSPIRE’  விருது இக்கண்டுபிடிப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினி, விஜய், அஜீத் படங்களுடன் போட்டி: 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது!


ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு போட்டியாக 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாடல்கள் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியாகிறது. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலையொட்டி ஜனவரி 14–ந்தேதி வருகிறது. தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2' படத்தை ஜனவரி 26–ல் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

 'கோச்சடையான்' படம் 700 தியேட்டர்களில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் விஜய், அஜீத் படங்களுக்கு தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் ஒரு படத்தை சில தினங்கள் தள்ளி ரிலீஸ் செய்யலாமா என்று யோசிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கமல் படமும் போட்டிக்கு வருவது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். பெரிய படங்கள் 20 நாட்கள் வரை தியேட்டர்களில் ஓடுகின்றன. படம் ஹிட்டானால் 50 நாட்கள் வரை ஓட்டுகிறார்கள். எனவே ரஜினி, விஜய், அஜீத் படங்கள் ரிலீஸ் ஆனால் பிப்ரவரி மாதம் வரை அந்த படங்களையே திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்வார்கள்.

 'விஸ்வரூபம் 2' படம் இடையில் ரிலீசாகும் போது 3 படங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தியேட்டர்களையே 'விஸ்வரூபம் 2' படத்துக்கும் பிரித்து கொடுக்க நேரும். இதனால் வசூல் பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். நான்கு படங்களுக்கும் பாதிப்பு வராத வகையில் எவ்வாறு திரையிடுவது என்று ஆலோசனை நடக்கிறது.

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்!

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.

***

கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.

***

ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
 போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
 பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.

***

பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற…
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..

***

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு…
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.

***

என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?

அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

***

 
back to top