.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 19, 2013

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், காய்ச்சல் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் காய்ச்சல் நீங்கும்.ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும்....

முட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்!

 இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து...

பழமொழியில் ரீமிக்ஸ்!! ரீமிக்ஸ்!!

பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க, பழைய படத்த ரீமேக் பண்றாங்க, அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்? அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம். அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம். ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள் பழசு: இளங்கன்று பயமறியாது புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும் பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே...

செவ்வாய்க்கு "மாவென்' விண்கலம்: "நாஸா அனுப்பியது"

 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை அமெரிக்கா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.நாஸா அமைப்பினால் உள்ளூர் நேரப்படி மதியம் 1.28 மணிக்கு, அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணித்து செவ்வாயை அடையும். இது குறித்து நாஸா தரைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கையில், "விண்கலம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளது.அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையும் மாவென், அந்த கிரகத்தின் நிலப்பரப்புக்கு 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். எனினும், அது 5 முறை செவ்வாய் நிலப்பரப்புக்கு 125 கி.மீ. தூரம் நெருக்கமாக வந்து, அதன் சூழ்நிலையை...
Page 1 of 77712345Next

 
back to top