
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .பரோட்டாவின் கதை என்ன தெரியுமா ?பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின;...