1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.2. நன்றாகத் தூங்குங்கள்நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.3. நடங்கள்! ஓடுங்கள்!தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம்...
Monday, November 25, 2013
உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்!

இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண...
உயில் எழுதுவது எப்படி? How to write a will?

ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).உயில் என்பதே உறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப் பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில்...
பண மொழிகள்!

செல்வம் சேர்ப்பதற்கு அறிவு வேண்டும்; அப்படி சேர்க்கும் செல்வத்தைக் கட்டிகாக்க துணிவு வேண்டும். அறிவு இருக்கிற அளவுக்குப் பலரிடம் துணிவு இருப்பதில்லை. (அதனால் தான் இந்தியா இன்னும் ஏழை நாடாக இருக்கிறது)வாங்குபவனுக்கு நூறு கண்கள் தேவை. விற்பவனுக்கு ஒரு கண் போதும்.கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகம் விரும்புபவனே ஏழை.தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம், முடிவில் தேவையுள்ள பொருட்களை விற்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிடும்.எல்லோரும் பணத்தை வெறுக்கிறார்கள். அடுத்தவருடைய பணத்தை மட்டும்!!!ஒருமுறை சம்பாதித்த பணம் இருமுறை சேமித்ததற்குச் சமம்.முதுமைக்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்று இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி பணப்பையை மூடிக்கொள்ளும்.பணத்தை...