
வரும் பொங்கல் தமிழக ரசிகர்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக இருக்கப் போகிறது. காரணம், அன்றைய தினத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளன. ஜனவரியில் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாக இருப்பதால் அதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. எனவே, பொங்கலுக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.அதன் விவரம் வருமாறு:-டிசம்பர் 12 – கோச்சடையான்ரஜினி, தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். முற்றிலும் அனிமேஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ஆஸ்கார்...