.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 1, 2013

கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்…

 

கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்..

மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.
ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்..

அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தமிழ்ச் சொற்கள்!

தமிழில் டீக்கு "தேநீர்',

காபிக்கு "குளம்பி' என்று

 பெரும்பாலோருக்குத் தெரியும்.

மற்ற சில முக்கியமான உணவு

 பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

 புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

 கிச்சடி - காய்சோறு, காய்மா

 கேக் - கட்டிகை, கடினி

 சமோசா - கறிப்பொதி, முறுகி

 பாயசம் - பாற்கன்னல்

 சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

 பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

 பொறை - வறக்கை

 கேசரி - செழும்பம், பழும்பம்

 குருமா - கூட்டாளம்

 ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

 சோடா - காலகம்

 ஜாங்கிரி - முறுக்கினி

 ரோஸ்மில்க் - முளரிப்பால்

 சட்னி - அரைப்பம், துவையல்

 கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

 பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

 போண்டா - உழுந்தை

 ஸர்பத் - நறுமட்டு

 சோமாஸ் - பிறைமடி

 பப்ஸ் - புடைச்சி

 பன் - மெதுவன்

 ரோஸ்டு - முறுவல்

 லட்டு - கோளினி

 புரூட் சாலட் - பழக்கூட்டு

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!


வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

சாமை அரிசி உப்புமா - சமையல்!

 

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப்

 வெள்ளை வெங்காயம் - 1

கேரட் - ஒன்று

 நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு,

கடுகு - அரை டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 * சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 * வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 * கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.

 * வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும்.

 * கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

 * இப்போது சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

 
back to top