நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள்காலை உணவைத் தவிர்க்காதீர்!பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று...
Thursday, December 5, 2013
மசாலா பொருட்களின் மகத்துவம்!

நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும், மசாலா பொருட்களும் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பவனவாகவும் சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துபவனாகவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுபவனாகவும் உணவின் தரத்தை மேம்படுத்துபவனாகவும் அமைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன. உடலின் எடையை குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும் மசாலா பொருட்களையும் பார்க்கலாம். வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளை தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனை கட்டுப்படுத்துகிறது. மஞ்சளுக்கு உடல் எடையை குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்பு திசுக்கள் உருவாவதை குறைக்க உதவுகிறது. இதன் மூலம்...
கல்லெறிந்தவனுக்கும் கருணை!
அந்த நாட்டுக்கு மகான் ஒருவர் வந்தார். அவரை தரிசிக்க பெரும் கூட்டம் திரள்கிறது என்பதை அறிந்த அந்த நாட்டு மன்னனுக்குப் பொறாமை. 'பண பலமும் அதிகார பலமும் கொண்ட தன்னை விட, அந்த மகான் எந்த விதத்தில் உயர்ந்தவர்?' என்று எண்ணியவன், இது பற்றி அறிய மாறு வேடத்தில், மகானின் இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கு, மரத்தடியில் அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார் மகான். அப்போது, திடீரென்று பறந்து வந்த கல் ஒன்று மகானின் நெற்றியை பதம் பார்த்தது. கூட்டத்தினர் கல்லெறிந்தவனைப் பிடித்து, தண்டிக்க முற்பட்டபோது, மகான் தடுத்தார்.''ஏனப்பா என் மேல் கல்லெறிந்தாய்?'' என்று அவனைப் பார்த்துகேட்டார் மகான். அவன், ''பழம் பறிப்பதற்காகக் கல் எறிந்தேன். அது, தங்கள் மேல் விழுந்து விட்டது!'' என்றான்.அவனை ஆறுதலுடன் அணைத்துக் கொண்ட மகான், சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கூறினார்: ''பாருங்கள்... தன் மேல் கல்லெறிந்தவனுக்கு,...
இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்!
காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என்றும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்ததையுடுத்து என் வாழ்நாளில், இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் சவால் விட்டுள்ளார். நேற்று காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர்,”காஷ்மீரை மையமாக கொண்டு இந்தியா,பாகிஸ்தான் நாடுகளிடையே எந்நேரமும் 4வது முறையாக அணுஆயுத...