.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 13, 2013

‘ஒருதலைராகம்’ புகழ் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம்!

டி ஜே எம் அசோசியேட்ஸ் சார்பாக எம் ஐ வசந்தகுமார் தயாரிப்பில் ஒருதலைராகம் புகழ் சங்கர் இயக்கம் முதல் தமிழ் படம், முதல் முறையாக துபாயில் ஐம்பது நாட்கள் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் போன்ற சிறப்புகள் வாய்ந்தது ‘மணல் நகரம்’.இருநூற்று இருபத்தைந்து படங்களுக்கு மேல் மலையாளம் மற்றும் தமிழில் நடித்தவரும்,’ வைரஸ்’,’ கேரளோற்சவம் -2009′ ஆகிய இரண்டு மலையாளப் படங்களை இயக்கியவருமான ஒருதலைராகம் ஷங்கர். இவர் தமிழில் முதல்முறையாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் ‘மணல் நகரம்’ .சன் மியூசிக் புகழ் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். துபாயைச் சேர்ந்த வருணா ஷெட்டி புதுமுக நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ஜெய்ஸ், வினோத்குமார் ஆகியோர்...

நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க டெல்லி ஹைகோர்ட் அனுமதி!

வரி ஏய்ப்பு செய்த சென்னை நோக்கியா தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடை எதுவும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மைக்ரோசாப்ட்டிற்கு விற்பதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.வரி ஏய்ப்பு செய்ததாக கூறி சென்னையிலுள்ள நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்நிறுவனம் தனது மொபைல் போன் தொழிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 42,500 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை விற்பதற்கு முன் இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 21,000 கோடி...

பேஸ்புக்கில் புதிதாக “Unfollow” பட்டன்!

குறிப்பிட்ட நண்பர்களிடமிருந்து வரும் இடுகைகளையும், தகவல்களையும் தடை செய்வதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த “Hide All” என்ற பொத்தானுக்குப் பதிலாக இன்னும் வசதியாக “Unfollow” என்ற பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் வலைத்தளம்.இந்த “Unfollow” பொத்தானை பயன்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது இடுகைகள் மற்றும் தகவல்களை தடை செய்யலாம்.இதன் மூலம், எப்போதும் போல் அவர்களுடன் நட்பு வட்டத்தில் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்களின் இடுகைகள் உங்களது “News Feed” பக்கத்தில் வராத வண்ணம் தடுத்து வைக்கலாம். தங்களது ”News Feed” பக்கத்தில் தேவையில்லாத விஷயங்களை படிப்பதைத் தவிர்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த...

சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்!

 எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம்.விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர் வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.முன்னோர்தம் அறிவையும் அனுபவத் தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். “உன்னிடம்...
Page 1 of 77712345Next
 
back to top