.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 15, 2013

நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!

முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந்தது.இந்த 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) செல் கோழியின் உடலில் உள்ளது. இதுவே முட்டையாக மாறி இருக்கிறது.'வோக்லெடின்-17' புரோட்டின், 'கிறிஸ்டல்', 'நியூகிளீசா'க மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது...

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்!

பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.வளர்ந்து பெரியவர்களாகி விட் டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.35 வயதைக் கடந்த வர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு உரிய பணிகளை செவ்வனே...

காயத்ரி மந்த்ரம் ...

காயத்ரி என்றால்,எவரெல்லாம் தன்னைக் கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரஷிப்பது என்பது அர்த்தம் ..காயந்தம் த்ராயதே யஷ்மத் காயத்ரி (இ) த்யபிதீயதேகானம் பண்ணுவதென்றால் இங்கே பாடுவது என்று அர்த்தம் இல்லையார் தன்னை பிரேமையுடனும் பக்தியுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்த்ரம் ரஷிக்கும் .ஓம் பூர் புவ: ஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோன: ப்ரசோதயாத்என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை முறையாக ஒரு முறை செய்து பார்த்தால் வாழ்வில் வரும் மாற்றங்களை வைத்து நீங்கள் உணரலாம். சமைப்பதென்றால் கூட ஒரு முறையிருக்கிறதல்லவா. அப்படித்தான் இதுவும். இதற் கென்றொரு முறையிருக்கிறது.இம்...

ஆஸ்துமாவா? அச்சம் வேண்டாம்!

கொட்டும் பனியும், கடும் குளிருமாக, காலையில் கண்விழிக்கும் போதே 'இன்னும் கொஞ்சம் தூங்கலாமே..!’ என போர்வைக்குள் சுருண்டு படுக்கத் தோன்றும் சொகுசான காலம் இது. இந்தப் பருவத்தில் வெயிலும் வெளிச்சமும் குறைந்து காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால், பல நோய்களும் வரிசைகட்டி வரக் காத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு நோய்களின் பாதிப்பு மிக அதிகமாகும்.அதிலும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்று மாதங்கள் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிம்ம சொப்பனம்தான். இந்தப் பாதிப்பிலிருந்து மீள, இன்ஹேலர், வெந்நீர், மாத்திரைகள், மருந்துகள் என ஏகப்பட்ட தற்காப்புகள் தேவைப்படும்.இந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்துமா நோயாளிகள்...
Page 1 of 77712345Next

 
back to top