
சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை...