.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

கம்ப்யூட்டர் மேதைக்கு அரச மன்னிப்பு....?



ஒரு வரலாற்று தவறு அரச மன்னிப்பு மூலம் சரி செய்யப்பட்டிருக்கிறது. கணிணி யுகத்தின் முன்னோடியும் , இரண்டாம் உலகபோரில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை காக்க தனது கணிணி திறமை மூலம் உதவியவருமான ஆலன் டியிரிங் மீதான களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர் என் தண்டிக்கப்பட்ட டியூரிங்கிற்கு பிரிட்டன் மகாரணியின் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலன் டியூரிங் கண்ணி யுகத்தின் முன்னோடி. கணிதப்புலி. அந்த காலத்து தாக்காளர். அப்போதே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைப்பது பற்றி யோசித்தவர். ஆரம்ப கால கப்யூட்டர்களுக்கான நிரல்களை உருவாக்கியவர். இன்று கம்ப்யூட்டர் , சூப்பர் கம்ப்யூட்டர் என்று எல்லாம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக அவருக்கு உலகம் நன்றி கடன் பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஹிட்லரின் கை ஓங்கியிருந்த இரண்டாம் உலகப்போரின் போது அவரது பங்களிப்பே நேச நாடுகளுக்கு வெற்றியை தேடித்தந்ததோடு ஆயிரக்கணக்கானோரின் உயிர்களையும் காப்பாற்றியது. எனியாக் கம்யூட்டர் மூலம் ஹிட்லர் அனுப்பிய ரகசிய செய்திகளை டியூரிங் இடைமறித்து அவற்றின் சங்கேத குறியீடுகளை உடைத்து புரிய வைத்தார். இதற்காக அவர் பாம்ப் ( Bombe) எனும் பெயரில் கம்ப்யூட்டர் குறியீடுகளை புரிந்து கொள்வதற்கான கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

டியூரிங் அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர்களை சிந்திக்க வைத்து செய்றகை மூளையை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இயந்திர அறிவிற்காக அவர் உருவாக்கிய பரிசோதனை  டியூரிங் சோதனை என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. கம்ப்யூட்டர் துறையின் ஈடு இணையில்லாத மேதை என்று கொண்டாடப்படும் டியூரிங் மீது ஒரு களங்கமும் இருந்தது. டியூரிங் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டிருந்தவர். அவரது காலத்தில் அது குற்றமாக கருதப்பட்டதால் அவர் தண்டிகப்பட்டார். ரசாயணம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார். 1952 ல் இந்த அவமானம் அவருக்கு நேர்ந்தது. இதைவிட மோசமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்து 1954 ல் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

டியூரிங் மறைவுக்கு பிறகு கம்ப்யூட்டர் துறை எங்கேயோ வளர்ந்து வந்துவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் அவரது பங்களிப்பு மகத்தானது . அவரது மேதமையை கொண்டாடி வருபவர்கள் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். 2009 ஆம் ஆண்டு டியூரிங் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு மன்னிப்பு வழஙக்ப்பட வேண்டும் எனும் கோரிக்கை இணைய விண்ணப்பமாக முன் வைக்கப்பட்டது. இதற்கு பல்லாயிரக்கனக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த காடன் பிரவுன் , அர்சு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு டியூரிங் தண்டிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்தார். 2011 ம் ஆண்டு டியூடிங்கிறகு மன்னிப்பு வழங்க கோரி மீண்டும் இணையா கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவு குவிந்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது டியூரிங்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிறிஸ் கிரேலிங் வேண்டுகோளை ஏற்று முறைப்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது. ஒரு மேதை மீதான சரித்திர களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

மௌன நாயகனாக நடிக்கும் தனுஷ்




ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த இந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன்.மேலும், இப்படத்தில் தனுஷுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.

           காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் .மேலும் இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்




பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, சீக்கிரம் தூங்கச் சென்று, சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கும், தாமதமாக தூங்கச் சென்று காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளும் ஒரே அளவில்தான் தூங்குகிறார்கள் என்றாலும், தாமதமாகத் தூங்கச் செல்லும் குழந்தைகளின் உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகிறது.

மேலும், மிகக் குறைவான உறக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏராளமான உடல் பிரச்சினைகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டுச் சூழல் தான் குழந்தைகளின் உறக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர் சரியான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கத்தைக் கடைபிடித்தால் குழந்தைகளும் சரியான நேரத்தில் தூங்குவார்கள். எனவே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாதது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

சூரியின் பெயரால் சூப்பர் ஸ்டாருக்கு அவதூறு...




டுவிட்டர் கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கொமடி நடிகர் சூரி.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’.இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி ‘நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று மனம் விட்டு பாராட்டி ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் வெளியிட்டார். இது செய்தியாக பத்திரிக்கைகளின் விளம்பரத்திலும் இடம் பெற்றது.இந்தக்கடிதம் நடிகர் சூரிக்கு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளது. இந்தப்படம் பற்றி டுவிட்டரில், “ஒரு பிரபலம், ஒரு படம் ஆஹா ஓஹோன்னு இருக்குதுன்ன்னு சொன்னாரு அப்படிங்கிற்துக்காக அந்தப்படங்களை பார்க்காதீங்க, சில பேரு மொக்கைப்படங்களுக்கு கூட நல்ல விமர்சனம் கொடுப்பாங்க” என குறிப்பிட்டிருக்கிறாராம்.ரஜினி ‘இவன் வேற மாதிரி’ படத்திற்காக கொடுத்த பாராட்டுக் கடிதத்தைப் பற்றித்தான் சூரி இப்படி எழுதியிருக்கிறார் என சில பேர் அவர்மேல் அம்பு தொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆனால் விசாரித்ததில் சூரிக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பதுடன் அதை ஆபரேட் செய்யவும் அவருக்கு தெரியாதாம். சூரியின் மேல் வெறுப்பு கொண்ட சிலர் தான் இதனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 
back to top