.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 29, 2013

கணவன் வாங்கலையோ..கணவன்....?




ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..


அது என்னன்னா...!  

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.


2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்


இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.


ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
அப்டியே வெளிய தான் போக முடியும்.  


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது   



முதல் தளத்துல அறிக்கை பலகைல


 "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு   



இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா



இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல



 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு    



இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.   



மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல



"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு



அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.



நாலாவது தளத்துல அறிக்கை பலகைல




"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?



கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.



ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல

 

 "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.



வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....


அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..   


ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

 

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..


இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .


எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

'ஜில்லா'- நடப்பது என்ன?




'ஜில்லா' படத்தின் சென்சார் டிசமபர்.30-ம் தேதி, டிரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி என முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஜய், மோகன்லால், காஜல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கியிருக்கிறார். ஆர்.பி.செளத்ரி தயாரிக்க, இமான் இசையமைத்து இருக்கிறார்.

பாடல் வெளியீடு முடிந்தாலும், படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் டீஸர் அல்லது டிரெய்லர் என எதுவுமே வெளியிடாமல் இருந்தது படக்குழு. இதனால், படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி நிலவியது.

இத்தகவல்கள் குறித்து 'ஜில்லா' படக்குழுவினரைத் தொடர்பு கொண்டபோது, "ஜனவரி 10ம் தேதி 'வீரம்' படத்துடன் 'ஜில்லா' வெளியாவது உறுதி. படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.

டிசம்பர் 30-ம் தேதி படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம். அதற்கு மறுநாள், டிசம்பர் 31ம் தேதி படத்தின் டிரெய்லர் YOUTUBE தளத்தில் வெளியாகும். அதனைத் தொடர்ந்து படத்தினை பிரமாண்ட விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்றனர்.

படத்தின் டைட்டில் கார்ட்டில் விஜய் பெயருக்கு முன்பாக மோகன்லால் பெயர்தான் காட்ட இருக்கிறார்கள். மோகன்லால் பெயர்தான் முதலில் வர வேண்டும். அவர் மிகப் பெரிய ஸ்டார் என்று விஜய் கூறிவிட்டதால் இம்முடிவை எடுத்திருக்கிறார்கள்

உதடு ஒட்டாத குறள்(கள்) ....?




யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -341


         ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. (திரு மு.வ உரை)

   
   
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். – 489



         கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். (திரு மு.வ உரை)

செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?




செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.


ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின் ஐபோன் மற்றும்ஆண்ட்ய்ராய்டில் செயல்படக்கூடிய இந்த செயலியின் வழியே உங்கள் செல்போன்பிரச்ச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். இந்த சந்தேகங்களுக்கானதீர்வுகளை தொடர்புடைய நிபுணர்கள் குறுஞ்செய்தி வழியாகவே வழங்குவார்கள்.


செல்போன்பயன்பாட்டில் கில்லாடிகளாக இருக்கும் நபர்கள் மற்றும் செல்போன்நிறுவனங்களிலேயே பணியாற்றியவர்களை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்நிபுணர்களாக இணைத்து கொண்டிருப்பதாக ஹாப்டிக் சொல்கிறது.


செல்போனில்நாம் அதிகம் பயன்படுத்துவது குறுஞ்செய்தி வசதியை தான். ஆனாலும் கூடசெல்போனில் ஒரு பிரச்ச்னை என்றால் யாருக்காவது போன் செய்து அல்லாடவேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றி செல்போன் சந்தேகங்களுக்குகுறுஞ்செய்தி வடிவிலேயே எளிதான பதில் பெற உதவும் டிவைஸ் ஹெல்ப் செயலியைமுதலில் உருவாக்கியிருப்பதாக ஹாப்டிக் தனது இணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக செயலி மூலமே அனைத்து தொழில்நுட்பஉதவிகளையும் பெற வைக்கும் திட்டம் இருக்கிறதாம். டிவைஸ் ஹெல்ப் ஆர்ம்பம்தான் என்கிறது ஹாப்டிக்.

 
back to top