
இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க காரணம்.ஆனால், வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் சாப்பிட்டால் சரி. தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ, அல்லது எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் பிரெட் ஜாம், பிரெட்...