.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு...!




சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு மிகப் பெரிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன.

அதாவது பூமியில் இருந்து நாம் காணும் நிலவை விட பலமடங்கு பெரியதாக இருந்தது. சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய நட்சத்திரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.  இதனையடுத்து சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துளள்ளனர்.

சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை, குறிப்பாக, நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள்தான் நாம் வாழும் பூமி. இந்த சூரிய குடும்பத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவையும் இணைந்துள்ளன. சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 850 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி



என்னென்ன தேவை?

பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 6,

தக்காளி - 1,

பச்சை மிளகாய் - 1,

கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி,

இஞ்சி- பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,

கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்.



எப்படிச் செய்வது?


பயத்தம் பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அதில் தண்ணீர் விட்டு, ஓட்ஸை போட்டுக் காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.


பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் ஓட்ஸ் பருப்புக் கலவையை இதில் சேர்க்கவும்.


சூப்பர் ஓட்ஸ் கஞ்சி ரெடி!   ஃபிட்டான உடலுக்குப் பொலிவூட்டும் சருமத்துக்கு ஏற்றது. இது ஒரு சத்தான உணவு... சரிவிகித உணவு.

முதுமையின் வலிகள்...



முதுமை பருவம் குழந்தை பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி  தான் முதியவர்களுக்கும். 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர்  என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயசுக்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால அவதிப்படறாங்க. அவங்களோட வலிகள், மத்தவங்களோடவலிகள் லேர்ந்து முற்றிலும்  மாறுபட்டது. அதுக்கான அணுகுமுறை, சிகிச்சைனு எல்லாமே வேறு என்கிற வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார் வயோகத்தால வரக்கூடிய வலி  திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம்,  வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி... இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான  காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.

இவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை.. சிகிச்சைக்கு ஓத்துழைக்க மாட்டாங்க. காது கேட்காதது, கவனமின்மை, மறதி,  மனரீதியான பிரச்சனைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளை பத்திப் புரிஞ்சிக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி  மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும் என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி,  தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, காலட எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்..

ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளை கொடுக்கிறப்ப, அதிக பட்ச கவனம் தேவை.. எல்லா மருந்துகளும்  அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சிக்கிட்டு தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு  மேலானவங்க எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி  செய்யறது மூலமா வலியோட தீவிரம் அதிகமாகிறதைத் தவிர்க்கலாம்.  சிலவலிகளுக்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா இருக்கும். ஆனா வயோதிகம்  காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாதுங்கிற நிலைமையில உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை  அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும் என்கிறார். 

‘ஒன்பதுல குரு’ இயக்குனருடன் விஜய்..?




‘ஒன்பதுல குரு’ இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்.

ஜில்லா படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாசின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்,

அதனைத் தொடர்ந்து பி.டி செல்வக்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் நடிகர் விஜயின் பிஆர்ஓவாக இருந்தவர். ஒன்பதில் குரு படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் அடுத்து தயாரிப்பாளராவும் அவதாரம் எடுக்கிறார்.

எனினும், படத்திற்கான தலைப்பு, நடிகர்கள் மற்றும் மற்ற விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்தை பி.டி.செல்வகுமாருடன் சேர்ந்து தமீன் என்பவரும் தயாரிக்கிறார்.

 
back to top