.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

விஜய்யின் இமேஜுக்காக உருவான கதை ஜில்லா...!




விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா நாளை ரிலீசாகிறது.இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:சூப்பர் குட் பிலிம்சின் 25வது ஆண்டில், 85-வது படமாக ஜில்லா உருவாகியுள்ளது. விஜய், மோகன்லால் இருவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்ததால், நாங்கள் சொன்னபடி பொங்கலையொட்டி படத்தை வெளியிடுகிறோம். கேரளாவில் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்றுள்ள மோகன்லால், நடித்ததற்கு சம்பளம் வாங்கவில்லை.

எங்கள் நிறுவனத்துக்காக, பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜஹான், திருப்பாச்சி படங்களில் நடித்தார் விஜய். அந்த படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின. அதுபோல் ஜில்லாவும் வெள்ளிவிழா கொண்டாடும். இந்தப் படத்தில் பேமிலி சென்டிமென்ட்டும் அதிரடி ஆக்ஷனும் கலந்திருக்கும். விஜய்க்காக, அவரது இமேஜுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் இந்தப் படம். அடுத்து ஜீவா நடிக்கும் படத்தை தயாரிக்கிறோம்.

தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.இயக்குனர் ஆர்.டி.நேசன் கூறும்போது, தனது நண்பர்கள் குழுவுடன் தெனாவட்டாகத் திரியும் இளைஞனை, செல்லமாக ஜில்லா என்று அழைப்பார்கள். அதையே தலைப்பாக்கி விட்டேன். விஜய்க்கும், அவரது வளர்ப்புத் தந்தை மோகன்லாலுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை என்றார்.

மூன்று வேறுபட்ட இசை வடிவங்களில் ஜில்லா ஆடியோ..?



இளைய தளபதி விஜய், மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ஜில்லா திரைப்படத்தின் ஆடியோ நேற்று வேறுபட்ட வடிவங்களில் வெளியாகவுள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.

ஜில்லா படத்தின் ஆடியோ தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் புதிய ஆடியோ வடிவமான ஆரோ 3D முறையிலும் மற்ற திரையரங்குகளில் 5.1 DTS மற்றும் டால்பி ஆட்டம்ஸிலும் வெளியாகவுள்ளது. ஜில்லா படத்தின் இசை ஏற்கெனவே ஹிட்டாகியிருப்பதால், இப்படத்தின் பின்னணி இசையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

ஜில்லா திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தலதளபதி படங்கள் இந்தப் பொங்கலில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜில்லா திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள மோகன்லால், கேரளாவில் இப்படம் சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தோள்பட்டை வாதத்திற்கு...

நன்றி நக்கீரன்...









மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு..!

``ஜெ.சி.டேனியல்`` - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு...


1930-ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம் அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார்.

இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.

திரைப்படத்தில் கதாநாயகி நாயர் சமூகத்தை சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை எப்படி உயர்ந்த சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்க வைக்கலாம் எனக் கூறி அப்போதிருந்த ஆதிக்க சமூகத்தினர் இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். மூன்று காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட அந்த படத்தை தயாரித்த ஜெ.சி.டேனியல் தன் சொத்துக்கள் பறிபோனதால் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த படத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டதால், மலையாளத்தின் முதல் சினிமாவை எடுத்தவர் ஜெ.சி.டேனியல் என்ற பதிவு இல்லமலே போனது. அவர் தமிழர் என்ற காரணத்தால் ஜெ.சி.டேனியலுக்கு சேரவேண்டிய மரியாதையை கேரள அரசாங்கம் கொடுக்க மறுத்தது.


இந்த உண்மையை தெரிந்துகொண்ட ஒரு பத்திரிக்கையாளர் எடுத்த முயற்சியால், இப்போது கேரள அரசாங்கம் ஜெ.சி.டேனியலை மலையாள சினிமாவின் தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஜெ.சி.டேனியல் பெயரில் வருடம் ஒருமுறை விருதும் வழங்கப்படுகிறது.

படம் எடுப்பதற்காக ஜெ.சி.டேனியல் எடுத்த முயற்சிகளையும், படம் எடுத்த பின்னர் அவர் பட்ட துன்பங்களையும் தான் வெள்ளித்திரையில் விளக்குகிறது பிருத்விராஜ், மம்தா உட்பட பலர் நடித்திருக்கும் ஜெ.சி.டேனியல் திரைப்படம். மலையாளத்தில் ரிலீஸாகி 7 மாநில அளவிலான விருதுகளை வென்ற இத்திரைப்படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்

இத்திரைப்படத்தில் இடம்பெறும் ’காற்றே காற்றே’, ’அம்மாடி நான்’ என்கிற பாடல்கள் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்றதோடு தமிழிலும் பல ரசிகர்களை கவந்துள்ளது.

 
back to top