.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 14, 2014

ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியின் நம்பியார் ட்ரெய்லர்..!



ஸ்ரீகாந்த் - சந்தானம் கூட்டணியில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படமான நம்பியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கணேஷ் இயக்கிவருகிறார். இவர் தெலுங்கின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவராவார்.

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான் விஜய், சுப்பு மற்றும் பலர் நடித்துவரும் இப்படம் நகைச்சுவையை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். இப்படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவருகிறது.

நம்பியார் ட்ரெய்லர்..!



இப்படத்திற்கு விஜய் ஏண்டனி இசையமைத்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா...!

பிரேம்ஜி ஒரு டம்மி பீசு - சரண்யா பொன்வன்னன்


நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனை, தேசிய விருது வென்ற நடிகையான சரண்யா பொன்வன்னன் டம்மி பீசு என்று விளையாட்டாகக் கூறியுள்ளார்.

விஜய் வசந்த், மஹிமா,சரண்யா பொன்வன்னன், பிரபு முதலானோர் நடிப்பில் ராஜபாண்டி இயக்கிவரும் திரைப்படம் என்னமோ நடக்குது. காதல் த்ரில்லர் படமான இப்படத்தினை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துவருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற இப்படத்தின் பேட்டி ஒன்றில் தான் இந்தப் படத்தில் பாடியுள்ளது குறித்து சரண்யா பொன்வன்னன் பேட்டியளித்தார். அப்பொழுது பிரேம்ஜியை காமெடியனாகவே, டம்மி பீசாகவே பார்த்த தனக்கு, அவரை இசையமைப்பாளராக, தனது குருவாகப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததாகவும், அவரா இவர் என்று நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை செல்லமாக டம்மிபீசாக தான் நினைத்துக் கொண்டதையும் விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

என்னமோ நடக்குது திரைப்படத்தின் இசைவெளியீடு கடந்த டிசம்பர் 16ல் வெளியானது நினைவிருக்கலாம். இளைய திலகம் பிரபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!




முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அத்துடன் சென்னை மற்றும் கோவை உரிமையும் விஜய் பெறவுள்ளார் (அந்த உரிமை சுமார் 45கோடி வருமாம்).

ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸோ விஜய்யை காட்டிலும் அதிகம் சம்பளத்தை கேட்டு பெற்றிருக்கிறாராம். அதாவது விஜய் சம்பளத்தைவிட இரண்டு கோடி அதிகமாக ரூ 20 கோடி சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம் முருகதாஸ். இதை கேட்ட விஜய் முதலில் அதிர்ந்து போனாராம்.

பின்னர் இதையெல்லாம் கேட்டும் கேட்காமல் இருப்பது தான் நல்லது என அமைதியாக போய் விட்டாராம். ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது

காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் எம்.ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும் அறிமுகமானார். அறிமுகப் படமே அட்டகாசமான வெற்றியைத் தந்ததால், அப்படத்திற்குப் பிறகு இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி காதலிக்கிற பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

சசிக்குமாரின் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது கதிர்வேலன் காதல். உதயநிதி ஸ்டாலினுக்கும் இது இரண்டாவது படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நயன்தாரா உதயநிதியின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தினைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் ”காதலித்த பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்ககூடாது; இது பசங்களுக்கும் சரி, பொண்ணுங்களுக்கும் சரி நல்ல விசயம்தான்” என்று விளையாட்டாகத் தெரிவித்தார்.

இது கதிர்வேலன் காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ல் வெளியாகவுள்ளது.

 
back to top