
பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம் எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும், நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.ஆனால் அதுபோன்ற கேள்விக்கு, "என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்றும், கமிட்டி உறுப்பினர்கள்தான், நேர்முகத் தேர்வில் கேள்விகளை கேட்க வேண்டும்" என்ற பதிலை கட்டாயம் சொல்லக்கூடாது.நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, முடிந்தளவு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால், அதுபோன்ற நேரங்களில்...