
கஸ்தூரிராஜா தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாரித்து டைரக்ஷன் செய்து வரும் படம் காசு பணம் துட்டு. இதில் நடித்திருக்கும் நடிகர்கள், பாடியிருக்கும் பாடகர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை அண்ணாமலை செட்டியார் மன்றத்தில் நடந்தது. கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, மகன் தனுஷ், மருமகள் ஐஸ்வர்யா, இன்னொரு மகன் செல்வராகவன், மகள், மருமகன் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இயக்குனர்கள் சரவணன், பொன்ராம், துரை.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.படத்தின் பாடலுக்கு அதில் நடித்தவர்களே ஆட்டம்போட்டனர். கஸ்தூரிராஜாவும் ஒரு பாட்டுப் பாடினார். பின்னர் படத்தின் ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. பின்னர்...