.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, September 8, 2013

மருத்துவ டிப்ஸ்! - குழந்தைகளுக்கு வாந்தி நிற்க...

* வேப்பம் பூ ரசம் அருந்தினால், வயிற்றில் உள்ள உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் நீங்கி விடும். * தினமும், அருகம் புல் சாறு குடித்து வந்தால், மலச்சிக்கல் இருக்காது. * வசம்பை சுட்டு சாம்பலாக்கி, பொடி செய்து, தேனுடன் கலந்து குழந்தைகள் நாக்கில் தடவினால், வாந்தி நிற்கும். ...

"கரு கரு' கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் உண்டா... கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர, தவம் கிடக்கும் பெண்களுக்காகவே இந்த கட்டுரை:* வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும்.* நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும். * அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும். * இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு தொல்லை...

ஏற்றுமதி கொள்கையில் ரயில்வே முறைகேடு; புதிய ஊழல் ; ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு!

நாளுக்கொரு ஊழல் வெளி வருவதில் தற்போது ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய தணிக்கை துறை கணக்காயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசை எதிர்க்க இதுவும் ஒரு ஊழலாக கிடைத்துள்ளது.சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், நிலக்கரி முதல் ஆணுறை விநியோகம் வரை மத்திய அரசு பல்வேறு ஊழல் முறைகேட்டில் சிக்கி பெரும் தலைக்குனிவை சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் ஒரு புதிய ஊழல் பூதம் கிளம்பியிருக்கிறது. ரயில்வேயில் ஏற்கனவே பணியாளர் தேர்வு மையத்தில் நடந்த ஊழல் காரணமாக இந்த தேர்வு முழு அளவில் ரத்து செய்யப்பட்‌‌டது. இந்நிலையில் ரயில்வே ஏற்றுமதி சரக்கு கட்டணத்தில் குறைத்து வசூலித்து மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு பயனீட்டுக்கு போக ஏற்றுமதியை ஊக்குவிக்கும்...

சிரியா மீது மூன்று நாட்களுக்கு தீவிர தாக்குதல் நடத்த "பென்டகன்' திட்டம்!

சிரியா நாட்டின் மீது, மூன்று நாட்கள், தீவிர தாக்குதலை நடத்த, அமெரிக்க ராணுவ தலைமையகமான, "பென்டகன்' திட்டமிட்டுள்ளது.சிரியா நாட்டில், அதிபர் பஷர் -அல்- ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன.இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர்; 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.ரசாயன ஆயுதம்:சிரியா நாட்டுக்கு...
Page 1 of 77712345Next

 
back to top