.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, September 18, 2013

டாப் 20 சமையல் குறிப்புகள்!

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும். மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும். துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார்...

நெஞ்சை அள்ளும் தஞ்சை - சுற்றுலாத்தலம்!

நெஞ்சை அள்ளும் தஞ்சை வரலாறு:  தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நகரம் தஞ்சை. இந்த  பகுதியை  ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே கொண்டு இந்நகரம் "தனஞ்சய ஊர்"என்று அழைக்கப்பட்டு பின்பு அதுவே மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றதாக கூறப்படுகிறது.     கி.பி. 850-ல் தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர்களிடமிருந்து விஜயாலயன் கைப்பற்றித் தஞ்சையில்  சோழர் ஆட்சியைத் நிறுவினான். இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் பெற்றது. கி.பி. 1532-ல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. திருச்சியைத் தலைநகராகக்கொண்டுஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர்...

பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை - சுற்றுலாத்தலம்

பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை     கன்னியாகுமரி மாவட்டத்தின்  தக்களைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மை. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அரண்மனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியபோது கட்டப்பட்டது. நுணுக்கமான மர வேலைப்பாடுகளுடன் கூடிய 14 கட்டிடங்கள், 144 ராட்சத அறைகள் கொண்ட இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேலும் இந்த அரண்மணையில் எங்குமே மின் விளக்குகள் கிடையாது. சூரியனின் ஒளியினாலே இந்த அரண்மனைக்கு வெளிச்சம் கிடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.இந்த அரண்மனை தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரள தொல்பொருள் துறையினரால்...

மனதை மயக்கும் மைசூர் - சுற்றுலாத்தலங்கள்!

மனதை மயக்கும் மைசூர்கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம் மைசூர். இந்நகரமே பண்டைய கால மைசூர் இராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. இவ்வூரை சங்க காலத்தில் மையூர் என்றும் எருமையூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் இந்நகரை ஆண்டவன் மையூர் கிழான் என்பவன் ஆவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை சிறுவன் என்று எண்ணி  சேர, சோழ மன்னர்களுடன் சேர்ந்து போரிட்டு தோற்ற வேளிர் அரசர்களில் இவனும் ஒருவன் ஆவான். பின்னர் 1399இல் இந்நகர் ஒரு பேரரசாக அமைக்கப்பட்டதோடு விஜயநகர பேரரசின் வீழ்ச்சி வரை அதன் கீழ் சிற்றரசாக இருந்தது. தற்போதும் இந்நகரை சுற்றி அமைந்துள்ள மைசூர் அரண்மனை, பிருந்தாவன் தோட்டம், மைசூர் அருங்காட்சியகம், மைசூர் ஸ்ரீ...
Page 1 of 77712345Next
 
back to top