.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, September 24, 2013

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் உள்ளது. 1974-ஆம் ஆண்டும் பின் 1976-லும் இந்திய, இலங்கைக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இந்தியாவால்...

சென்னை உலக செஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம்!

இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் நார்வேவின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயத் ரீஜென்சி நட்சத்திர ஓட்டலில் நவம்பர் 9–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இரு வீரர்களும் மொத்தம் 12 சுற்றுகளில் மோதுவார்கள். முன்னதாக நவம்பர் 7–ந்தேதி பிரமாண்டமான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு ரூ.8 கோடியும், தோற்கும் வீரருக்கு ரூ.6 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். போட்டியை சுமார் 400 பேர் நேரில் ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான டிக்கெட் கட்டண...

அடுத்த மாதம் அறிமுகமாகின்றது Ubuntu Touch Mobile இயங்குதளம்!

வைரஸ் தாக்கங்கள் அற்றதும், திறந்த வளமாகவும் கருதப்படும் இயங்குதளமான Ubuntu மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் போன்ற மொபைல் சாதனங்களில் பல்வேறு இயங்குதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனைப் பின்பற்றி மொபைல் சாதனங்களுக்கான Ubuntu இயங்குதள உருவாக்கமும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.அதாவது இந்த இயங்குதளமானது முற்றிலும் தொடுதிரை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றது.இதனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளன...

சர்க்கரை நோய் – கொஞ்சம் கசப்பான உண்மைகள்!

மனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட...
Page 1 of 77712345Next
 
back to top