அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல் பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை..கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது....
Wednesday, September 25, 2013
முக அழகிற்கு சில டிப்ஸ்!
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாறுடன் கடலை மாவு சேர்த்து தடவலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் வேர்க்குரு வராமல், வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கலாம்.முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக...
சருமத்தில் ரோமமா? நீக்கலாம்... தடுக்கலாம்!
நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப் பெரிய சவாலான இந்தப் பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழ குத் துறையில். அத்தனையும் பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.‘‘பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின்...
குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது. வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக...