முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று. இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா...
Thursday, September 26, 2013
சொட்டவாளக்குட்டி’ @ நையாண்டி ஸ்பெஷல் ஆல்பம்!
தனுஷ் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படம் ‘நையாண்டி’. ‘களவாணி’ சற்குணம் இயக்கி வரும் இப்படத்தின் நாயகியாக நாஷ்ரியா நஷிம் நடித்து வருகிறார்.’சொட்டவாளக்குட்டி’ என்று தான் முதலில் இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. பின்பு ‘நையாண்டி’ என்று தலைப்பினை மாற்றி இருக்கிறார்கள்.இந்நிலையில் ஏற்கனவே தெரிவித்த தேதிக்கு முன்னதாகவே தனது நையாண்டி படத்தை வெளியிடும் ஐடியாவில் இருக்கிறாராம் தனுஷ். இதனை மறை முகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படம் வெளி வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களே நீங்கள் எதிர்பார்க்கும் தினத்திற்க்கு முன்னதாகவே படம் வெளியாகலாம்...
வேகன் ஐஸ் கிரீம்!
என்னென்ன தேவை?மிகவும் கனியாத வாழைப்பழங்கள்-2வேர்க்கடலை வெண்ணெய்-1 1/2மேஜைக்கரண்டிகோகோ தூள்-3/4 தேக்கரண்டிவெண்ணிலா எசென்ஸ்-3 சொட்டுமுந்திரி பருப்பு, பாதாம் பருப்புஎப்படி செய்வது?ஒரு ஜாடியில் வாழைப்பழம், வெண்ணெய், கோகோதூள், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடிக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலகரித்து பரிமாறவு...
காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?
காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.ஈரோடு அருகே...