.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, September 27, 2013

புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!

உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணனி, மின்னணுவியல் பயன்பாட்டில் புதிய அத்தியாயமாகும்.குறைந்த ஆற்றலில், மிக வேகமான செயல்திறனை இந்தக் கணினி பெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இது குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மின்னியல் பொறியாளரும், கணிப்பொறி விஞ்ஞானியுமான சுபாஸிஷ் மித்ரா கூறுகையில்,“புதிய சாகாப்தத்தைச் சேர்ந்த கார்பன் நானோடியூப், சிலிக்கானைவிட...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - பக்கா திரை விமர்சனம்!

‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால்தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை ‘சுட்டக்கதை’யாக இல்லாத பட்சத்தில் அரசு தயவில்லாமல் அவரவர் செலவில் நேரு ஸ்டேடியத்தில் கூடி மிஷ்கினுக்கு தங்க ஜரிகையிட்ட பரிவட்டமே கட்டலாம். (உலகப்படங்களை மேய்பவர்களே… அலசி ஆராய்ஞ்சு அஞ்சு நாளுக்குள்ளே உத்தரவாதம் கொடுங்க)மருத்துவக் கல்லுரி மாணவரான ஸ்ரீ நள்ளிரவில் வீடு திரும்பும்போது துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க முயல்கிறார். ஆனால் அனைவரும் அந்த உயிர் மீது அலட்சியம் காட்ட,...

ராஜா ராணி சினிமா விமர்சனம்!

ஒவ்வொரு திருமணத்திலும் இணையும் மணமக்கள் திருமணத்திற்கு பின் கிடைத்த வாழ்க்கையை மனமுவந்து வாழ்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி வாழவில்லையென்றால் அதற்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் இளமை பருவத்தில் மலரும் காதலும் அதனால் ஏற்பட்ட வலியுமாகத்தான் இருக்கும்.காதலிக்கும் எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைத்துவிடுவதில்லை. காதல் மிகவும் ரம்மியமானதுதான் ஆனால் அது தோல்வியில் முடியும்போது வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டதுபோல தோற்றும். காதலை இழந்தவரிக்ன் மூளையிலும் ஒரு இருட்டு குடிக்கொண்டு விடுகிறது.  பிறகு வேருஒருவருடன் திருமணம் நடந்தாலும் இந்த இருட்டு விலகாமல் இருந்துவிடுகிறது. திருமணத்தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் இருட்டுகளை விலக்கினால்தான்...

7 வருடத்துக்கு பின் மோதும் அஜீத் - விஜய் படங்கள்!

ஏழு வருடங்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய், அஜீத் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தை நேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. இப்படத்தை பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர். திடீரென்று விஜய் தந்தையாக நடிக்கும் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே அவர் கால்ஷீட் கொடுத்த படங்களில் நடிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அவர் நடிக்கும் படங்களில் எந்த படம் முதலில் ரீலீஸ் ஆகுமோ, அந்த படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில்தான் ‘ஜில்லா‘ படத்துக்கும் கால்ஷீட்டை ஒதுக்கி தருகிறார் மோகன்லால்....
Page 1 of 77712345Next

 
back to top