.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 2, 2013

மன அழுத்தம் -சமாளிப்பது எப்படி?

ஸ்ட்ரெஸ் எனும் சீரியஸ் பிரச்னை!வேலை, வீடு என இரட்டைச் சுமை சுமக்கும் எல்லாப் பெண்களுமே அஷ்டாவதானிகள்தான். குடும்பத்துக்காக வேலையையோ,  வேலைக்காக  குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த அவர்களுக்கு, தம்மையும்  கவனித்துக் கொள்ள  வேண்டும் என்பது மட்டும் ஏனோ மறந்து விடுகிறது. ‘முடியலியே...’ எனப் புலம்பிக் கொண்டாவது முடியாத  காரியங்களையும் முடித்துவிட்டு  அடுத்த வேலையைப் பார்க்கிற அவர்களுக்குத் தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன  அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. அதை அப்படியே  விட்டால் அடுத்தடுத்து தொடரப் போகிற அவதிகளையும் அறியாத அவர்களை  எச்சரிக்கிறார் மனநல மருத்துவர்...

தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!

எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.சந்தேகத்துக்கான விதை:அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச  அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய்த் தடுப்புக்கு பல்வேறு வகைகளை  சுட்டிக்காட்டினாலும் குழந்தை பருவத்திலிருந்து...

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது!

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது. ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக அடிப்படையில் இல்லாமல், பாதுகாப்பு துறையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்கா இராணுவத்தலைமையகமான பெண்டகன் அதன் 10 பாதுகாப்பு தொழில்நுட்பங்களை...

கைகளால் பலன்...(நீதிக்கதை)!

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்...." இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ..."நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம் உள்ளதைபிறருக்கு வழங்கி வாழ்தலுமே...
Page 1 of 77712345Next
 
back to top