.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, November 4, 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்!

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.தற்போது Android, Apple iOS, Windows Phone 8, Blackberry போன்ற இயங்குதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் அதிகமான செயல்திறன் கொண்ட Processor, Camera, Network போன்ற...

'ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனைபூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது. இத்தகைய...

உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் நடந்தேறியதால், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடும் மக்கள் தரமான உணவைப் பெற முடியவில்லை.கிராமப்புறங்களில் சரிபாதிக்கும் மேலான குழந்தைகளும் சிறுவர்களும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள முடியாமல் பசி பட்டினியில் வாடுகிறார்கள்....

பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்!

 பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர்... . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும்...
Page 1 of 77712345Next

 
back to top