.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, November 30, 2013

பறக்கும் தட்டு கடற்பரப்பில் வீழ்ந்தமையால் மாரவிலவில் பரபரப்பு!

சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இரவு 7.30 அளவில் கடற் பரப்பில் ஒளியொன்று தென்படுவதனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.கடலுக்கு 100 மீற்றர் தொலைவில் நீண்ட நேரத்திற்கு இந்த ஒளி தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, நீல நிறத்திலான ஒளியொன்று தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எதிலிருந்து இந்த ஒளி தோன்றியது என்பதனை பொலிஸாரினாலும் கண்டறிய முடியவில்லை.இந்த ஒளியை பார்வையிட பிரதேசத்தைச் சேர்ந்த பலர்...

கமலும் பாலாவும் காட்டிய வழி இது! - சடச் சடக்கும் சீரியஸ் விவேக்!

 கையிலும் பையிலும் மரக்கன்றுகளோடு அலைந்து திரியும் ’சனக்களின் கலைஞன்’ விவேக் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்குத் திரும்பியிருக்கிறார். இயக்குனர் பாலாவின் உதவியாளர் ஆர்.கண்ணன் இயக்கும் ‘நான்தான் பாலா’ படத்தில் முதல்முறையாக, நகைச்சுவை உதறிவிட்டுச் சீரியஸ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.இந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொண்டார் விவேக்? அவர் வழிபடும் அப்துல் கலாமிடம் அவருக்குப் பிடிக்காதது என்ன? இன்னும் பல சூடான கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் விவேக்... நகைச்சுவை நடிகராக மட்டும் உங்களைப் பார்க்க முடியவில்லை. சமூக ஆர்வலராக இயங்குவதற்கு அப்பால், ஒரு கவிஞராக, ஒரு கட்டுரையாளராக ஆச்சர்யப்படுத்துகிறீர்கள். எப்போது எழுதத்தொடங்கினீர்கள்? உண்மையில்...

முதன் முறையாக குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற பெண்!

 அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பிரோஸ் பாத்திமா என்ற பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதன் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது, இதனை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்துகிறார்.இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(வயது 22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார்.இந்த சீசனில் ரூ.1 கோடி வென்ற முதல் பெண் பாத்திமா தான்.பாத்திமாவின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், இதனால் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.ஆனால் தனது தங்கையின் கல்லூரி படிப்பு பாதிக்காமல்...

பெற்றோர்களை பேணுவோம்!

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிக்கிறார்கள்....
Page 1 of 77712345Next

 
back to top